Salem vs Madurai: முதல் வெற்றி பெறுமா மதுரை-சொந்த மண்ணில் சேலம் என்ன செய்யப் போகிறது?
TNPL 2023: முதலில் நெல்லை அணியை எதிர்கொண்ட மதுரை தோல்வி அடைந்தது. அடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிடமும் தோற்றது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இன்று இரவு 7.15 மணிக்கு 15வது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
சேலம் அணியைப் பொருத்தவை சொந்த மண்ணில் ஆடுவது கூடுதல் பலம். இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள சேலம் அணி, 1 இல் மட்டுமே ஜெயித்துள்ளது. 2 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது சேலம்.
இந்த சீசனின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸிடம் வீழ்ந்தது சேலம்.
எனினும், அடுத்த திருச்சி அணியை 5 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் நெல்லை அணியிடம் தோற்றது.
இன்றைய ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் சேலம் விளையாடும்.
மதுரை அணியைப் பொருத்தவரை இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
முதலில் நெல்லை அணியை எதிர்கொண்ட மதுரை தோல்வி அடைந்தது. அடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிடமும் தோற்றது.
இன்றைய ஆட்டத்தில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என மதுரை தீவிரம் காட்டும் என்பதால் இந்தப் போட்டியில் பரபரப்பு நிச்சயம் பஞ்சம் இருக்காது.
சேலம் ஸ்பார்டன்ஸ்
அமித் சாத்விக் (விக்கெட் கீப்பர்), ஆகாஷ் சும்ரா, மான் பாஃப்னா, கௌசிக் காந்தி, ஆர் கவின், எஸ் அபிஷிக், முகமது அட்னான் கான், சச்சின் ரதி, சன்னி சந்து, அபிஷேக் தன்வார் (கேப்டன்), ராஜேந்திரன் கார்த்திகேயன்
சீசெம் மதுரை பேந்தர்ஸ்
எஸ் கார்த்திக் (விக்கெட்கீப்பர்), ஹரி நிஷாந்த் (கேப்டன்), கே தீபன் லிங்கேஷ், வாஷிங்டன் சுந்தர், ஜகதீசன் கௌசிக், சுதன் காண்டேபன், ஸ்வப்னில் சிங், தேவ் ராகுல், எஸ் ஸ்ரீ அபிசெக், முருகன் அஷ்வின், குர்ஜப்னீத் சிங்
தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும்.
இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும். 7வது சீசன் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுவரை லைக்கா கோவை கிங்ஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
டாபிக்ஸ்