TNPL Preview: கோவை கிங்ஸை சொந்த மண்ணில் சந்திக்கிறது சேலம் ஸ்பார்ட்டன்ஸ்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl Preview: கோவை கிங்ஸை சொந்த மண்ணில் சந்திக்கிறது சேலம் ஸ்பார்ட்டன்ஸ்!

TNPL Preview: கோவை கிங்ஸை சொந்த மண்ணில் சந்திக்கிறது சேலம் ஸ்பார்ட்டன்ஸ்!

Manigandan K T HT Tamil
Jun 27, 2023 06:40 AM IST

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், பால்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தியிருக்கிறது.

சேலம் வீரர்
சேலம் வீரர் (@SpartansSalem)

இரவு 7.15 மணிக்கு சேலத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகளிடம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி தோல்வி கண்டுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் லைக்கா கோவையை எதிர்கொள்கிறது.

லைக்கா கோவை கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை நெல்லை ராயல் கிங்ஸ் அணியிடம் மட்டும் தான் தோல்வி அடைந்திருக்கிறது.

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், பால்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தியிருக்கிறது.

முந்தைய 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக ஜெயித்திருக்கிறது. இன்று சேலம் அணியை முதல் முறையாக எதிர்கொள்கிறது.

லைக்கா கோவை கிங்ஸ் அணியில் ஷாருக் கான் அபாரமாக பந்துவீசி வருகிறார். பேட்டிங்கில் சாய் சுதர்ஷன் ஜொயித்து வருகிறார்.

சுரேஷ் குமாரும் சிறப்பாக விளையாடுகிறார். பந்துவீச்சுக்கு ஷாருக் கானுடன் சரவண குமார், சுபோத் பதி ஆகியோரும் உள்ளனர்.

எனவே கோவை அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.

சேலம் அணி பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலே முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். பெரிய அளவில் கடந்த 2 ஆட்டங்களிலும் அந்த அணி முத்திரை பதிக்கவில்லை. எனவே, இன்னும் சிறப்பான யுக்திகளுடன் விளையாட வேண்டியது அவசியம்.

இந்தப் போட்டியில் பரபரப்புக்கும் சுவாரசியத்துக்கும் நிச்சயம் பஞ்சம் இருக்காது. இப்போட்டியைக் காண உள்ளூர் ரசிகர்கள் அதிகம் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம். நமது தமிழக வீரர்களுக்கு ஆதரவு தரலாம்.

Fancode செயலியிலும் இந்தத் தொடரை நேரலையில் கண்டு ரசிக்க முடியும். கடந்த முறை மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.