Lyca Kovai Kings: அதிவேகமாக அரை சதம் பதிவு செய்த கோவை வீரர்!-இமாலய இலக்கை நோக்கி சேலம்
TNPL 2023: நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கோவை கிங்ஸ் அணி ரன்களை குவித்தது.
டிஎன்பில் கிரிக்கெட்டில் இன்றைய தினம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியும், லைக்கா கோவை கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
இது 19வது லீக் ஆட்டம் ஆகும். டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் கோவை கிங்ஸ் அணி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர் எஸ்.சுஜய், ஜே.சுரேஷ் குமார். சுரேஷ் குமார் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சாய் சுதர்ஷன் களமிறங்கினார். சுஜய், சாத் சுதர்ஷன் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
சுஜய் 44 ரன்களிலும், சுதர்ஷன் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதீக் உர் ரகுமான் நிதானமாக விளையாடினார்.
பின்னர் வந்த ராம் அரவிந்த் 22 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார். இந்த சீசனில் அதிவேகமாக அரை சதம் விளாசியவர் ராம் அரவிந்த் தான்.
இவ்வாறாக 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 199 ரன்களை கோவை குவித்தது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் விளையாடவுள்ளது.
இரவு 7.15 மணிக்கு சேலத்தில் இந்தப் போட்டி தொடங்கியது. சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகளிடம் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி தோல்வி கண்டுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் லைக்கா கோவையை எதிர்கொண்டிருக்கிறது. லைக்கா கோவை கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை நெல்லை ராயல் கிங்ஸ் அணியிடம் மட்டும் தான் தோல்வி அடைந்திருக்கிறது.
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், பால்சி திருச்சி, திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகளை வீழ்த்தியிருக்கிறது.
முந்தைய 3 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக ஜெயித்திருக்கிறது. இன்று சேலம் அணியை முதல் முறையாக எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியில் பரபரப்புக்கும் சுவாரசியத்துக்கும் நிச்சயம் பஞ்சம் இல்லை. இப்போட்டியைக் காண உள்ளூர் ரசிகர்கள் அதிகம் திரண்டு வந்திருக்கிறார்கள்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 சேனலில் இந்தப் போட்டியைக் கண்டு ரசிக்கலாம். நமது தமிழக வீரர்களுக்கு ஆதரவு தரலாம்.
Fancode செயலியிலும் இந்தத் தொடரை நேரலையில் கண்டு ரசிக்க முடியும். கடந்த முறை மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்