TNPL: சீறிப் பாய்ந்த சேப்பாக் அணிக்கு முதல் வெற்றி-சேலத்தை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl: சீறிப் பாய்ந்த சேப்பாக் அணிக்கு முதல் வெற்றி-சேலத்தை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

TNPL: சீறிப் பாய்ந்த சேப்பாக் அணிக்கு முதல் வெற்றி-சேலத்தை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

Manigandan K T HT Tamil
Jun 13, 2023 10:53 PM IST

TNPL 2023: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.

சேப்பாக் அணி வெற்றி
சேப்பாக் அணி வெற்றி (@TNPremierLeague)

டாஸ் ஜெயித்த சேப்பாக் அணி, முதலில் பேட்டிங் செய்தது. ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய பிரதோஷ் பால் அரை சதம் விளாசினார்.

என்.ஜெகதீஷன் 35 ரன்களிலும், கேப்டன் பாபா அபராஜித் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பிரதோஷ் பால் 55 பந்துகளில் 88 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சேலம் தரப்பில் சன்னி சாந்து அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார். அபிஷேக் தன்வார் 4 ஓவர்கள் வீசி 44 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார்.

மோஹித் ஹரிஹரன் 1 விக்கெட்டை எடுத்தார். கடைசி ஓவரில் 4 நோ பால், ஒரு வைடு வீசினார் அபிஷேக் தன்வார். இவ்வாறாக 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை குவித்தது சேப்பாக் அணி. 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் விளையாடியது.

பின்னர், 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் விளையாடியது. அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, அத்நான் கான் மட்டும் நின்று விளையாடினார்.

அதிகபட்சமாக பாபா அபராஜித், ராக்கி பாஸ்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விஜு அருளும் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இவ்வாறாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து தோற்றது. சேப்பாக் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. சேலம் வீரர் அத்நான் கான், 15 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.