SAFF Championship 2023: பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா - மூன்று கோல்கள் அடித்த சுனில் சேத்ரி
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
தெற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டியான சாஃப் சாம்பியன்ஷிப் (SAFF Championship) கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்தியா, குவைத், நேபால், பாகிஸ்தான், வங்கதேசம், பூட்டான், லெபனான், மாலத்தீவு அணிகள் இடம்பிடித்துள்ளன.
இதையடுத்து குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி பெங்களரூவில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் முதல் போட்டியாக இது அமைந்திருந்த நிலையில் இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் பாகிஸ்தான் கோல் கீப்பர் தவறவிட்ட வாய்ப்பு நன்கு பயன்படுத்தி கோல் ஆக்கினார் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி. இதையடுத்து ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்து. இதை இரண்டாவது கோல் ஆக்கினார் சுனில் சேத்ரி.
இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் முதல் பாதி வரை இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. பின்னர் இரண்டாவது பாதியிலும் இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தியது. ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதன் மூலம் இந்தியாவுக்கு 3வது கோல் பெற்ரு தந்தார் சுனில் சேத்ரி.
ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் இந்திய அணி ஸ்ட்ரைக்கரான உதாந்தா சிங் கும்மம், இந்திய அணிக்கான 4வது கோல் அடித்தார். இந்த போட்டியில் 70 சதவீதம் வரை இந்திய வீரர்கள் ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 23 ஷாட்களை சரியாக டார்கெட் செய்த இந்திய அணி 4 கோல்களை அடித்துள்ளது.
கடைசி வரை போராடியும் பாகிஸ்தான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இந்த போட்டியில் மூன்று கோல்களை அடிித்ததன் மூலம் அதிக கோல்கள் அடித்த ஆசியா சர்வதேச வீரர்களில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதல் நாளில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் குவைத் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நோபால் அணியை வீழ்த்தியது.
இன்று நடைபெற இருக்கும் போட்டியில் லெபனான் - பூட்டான், வங்கதேசம் - மாலத்தீவு அணிகள் மோதவுள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்