Sachin Tendulkar: கோடிகள் கொடுத்தாலும் சச்சின் டென்டுல்கர் நோ சொல்லும் ஒரே விஷயம் - சுவாரஸ்ய தகவல்
கிரிக்கெட் விளையாட வரும் தந்தை ரமேஷ் சொன்ன அட்வசை இன்றளவும் பின்பற்றி வருவதாக கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் சச்சின் டென்டுல்கர் தெரிவித்துள்ளார். அந்த சுவாரஸ்ய் நிகழ்வையும் அவர் பகிர்ந்துள்ளார்.
உலக புகையிலை எதிர்ப்பு நாளை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் புகையிலை பயன்பாட்டை குறைக்கவும், புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், புகையிலை பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சச்சின் டென்டுல்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: "எனது வாழ்நாளில் இதுவரை எந்த புகையிலை பொருள்கள் விளம்பரத்திலும் நடித்ததில்லை. படிப்பை முடித்துவிட்டு இந்திய அணியின் கிரிக்கெட் வீரராக அறிமுகமான சமயத்தில், புகையிலை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஆனால் அதில் நடிக்க மறுத்துவிட்டதாகவும்.
எனது தந்தை ரமேஷ் டெண்டுல்கர், "நீ நாளைய இளைஞர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும், இது போன்ற புகையிலை பொருள்கள் விளம்பரத்தில் நடித்தால், அதனை பார்த்து உன் ரசிகர்கள் அதற்கு அடிமை ஆவார்கள். எனவே எப்போதும் புகையிலை விளம்பரங்களில் நடிக்க கூடாது" தன்னிடம் கூறியதை சச்சின் நினைவு கூர்ந்தார்.
அத்துடன், தந்தைக்கு அளித்த வாக்குறுதியை தற்போது வரை காப்பாற்றி வருகிறேன். பிரபல சிக்ரெட் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோதிலும், அதை புறங்கணித்தேன் என்றார்.
சச்சின் டென்டுல்கர் பூஸ்ட் எனர்ஜி ட்ரிங், பெப்பசி, விசா மாஸ்டர் கார்டு, ஜில்லெட், பிரிட்டானியா பிஸ்கட், கேஸ்ட்ரால் ஆயில், லைஃப் இன்சூரன்ஸ் என பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருந்தபோதிலும் ஒரு முறை கூட சிகரெட், மது, பான் மசாலா விளம்பிரங்களில் இதுவரை நடித்ததில்லை. கோடிகளில் சம்பளம் கொடுத்தபோதிலும் இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பதை அவர் தவிர்த்து வருகிறார
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் அதை அவர் தொடர்ந்து வருவதன் காரணமாக இளைஞர்களின் மனம் கவர்ந்த வீரராக தொடர்ந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்