இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வுக் குழுவில் தமிழர்?
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை தேர்வு செய்வதற்கான குழுவில் இடம் பெறுவதற்காக முன்னாள் வீரர்களில் அஜய் ரத்ரா, அமய் குராசியா மற்றும் எஸ்.சரத் ஆகியோர் நேர்காணல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களை தேர்வு செய்வதற்கான குழுவில் இடம் பெறுவதற்காக முன்னாள் வீரர்களில் அஜய் ரத்ரா, அமய் குராசியா மற்றும் எஸ்.சரத் ஆகியோர் நேர்காணல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் எஸ்.சரத் தமிழ்நாட்டு அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியவர் ஆவார். இவர், தேர்வு செய்யப்பட்டால், தேர்வுக் குழுவில் தமிழரும் இடம்பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐயால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) சேத்தன் சர்மா மற்றும் ஹர்விந்தர் சிங் ஆகியோருடன் மேற்கூறிய வீரர்களை நேர்காணல் செய்தது. ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டவர்கள் குழுவின் முன் பிரசன்டேஷனை வழங்கினர். இந்த வாரம் குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும்.
தென் மண்டலத்தைச் சேர்ந்த சுனில் ஜோஷி மீண்டும் விண்ணப்பிக்க முயன்றால், அவருக்குப் பதிலாக தமிழ்நாடு அணியின் முன்னாள் வீரர் ஷரத் வலுவான போட்டியாளராக இருப்பார்.
சரத்துக்கு வாய்ப்பு கிடைத்தால், தற்போது ஜூனியர் ஆடவர் குழுவின் தலைவராக இருப்பதால் அவர் பதவி உயர்த்தப்படுவார். கடந்த ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை அவரது குழுதான் தேர்வு செய்தது.
களத்தில் உள்ள மற்றொரு போட்டியாளர் கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய தொடக்க வீரர் எஸ்.எஸ்.தாஸ் ஆவார்.
முன்னாள் அணி வீரர் டெபாசிஸ் மொஹந்திக்கு பதிலாக தாஸ் இடம் பெறலாம். தாஸ் 2000 மற்றும் 2002 க்கு இடையில் 23 டெஸ்ட் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கா விளையாடினார். 180 முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
இதேபோல், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான அபே குருவிலா அதிகபட்சமாக ஐந்தாண்டு பதவிக் காலத்தை முடித்துவிட்டார்.
இதனால், சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழு நான்கு உறுப்பினர்களாகக் குறைந்திருக்கிறுத. மேற்கு மண்டலத்திலிருந்து புதிய தேர்வாளரை வாரியம் நியமிக்க வேண்டியிருக்கும். குருவிலா பிசிசிஐ பொது மேலாளராக (கிரிக்கெட் மேம்பாடு) ஆகியிருக்கிறார்.
அண்மையில் நடந்துமுடிந்த பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் சேத்தன் சர்மா பங்கேற்றார். இதன்மூலம் அவர் தலைவராக தொடருவார் என்று தெரிகிறது.
டாபிக்ஸ்