Rohit Sharma: கட்டைவிரலில் காயம்; பயிற்சியில் இருந்து வெளியேறிய ரோஹித் ஷர்மா; போட்டியில் இருந்து விலகலா?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rohit Sharma: கட்டைவிரலில் காயம்; பயிற்சியில் இருந்து வெளியேறிய ரோஹித் ஷர்மா; போட்டியில் இருந்து விலகலா?

Rohit Sharma: கட்டைவிரலில் காயம்; பயிற்சியில் இருந்து வெளியேறிய ரோஹித் ஷர்மா; போட்டியில் இருந்து விலகலா?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 06, 2023 04:28 PM IST

பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Rohit Sharma
Rohit Sharma

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் மேலோங்கி காணப்படுகிறது. இந்த நிலையில் பயிற்சியின் மோதும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவிற்கு கட்டை விரலில் அடிப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அடிப்பட்ட இடத்தில் கட்டுப்போட்டுக்கொண்ட ரோஹித் ஷர்மா பாதுகாப்பு காரணங்களுக்காக பயிற்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார் இதனால் அவர் நாளை நடக்கும் இருக்கும் ஆட்டத்தில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த முறை ரன்னர்-அப் ஆன இந்தியா இந்த முறை ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. ஆகையால் அணியின் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது டெஸ்ட் உலகக் கோப்பை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு 2021 முதல் 2023 வரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற இரு அணிகள் தகுதி பெறும்.

இந்த கோதாவில் மொத்தம் 9 அணிகள் குதித்தன. ஆஸ்திரேலியா 19 போட்டிகளில் விளையாடி 11 வெற்றி, 3 தோல்வி, 5 டிரா என மொத்தம் 152 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அடுத்த இடத்தில் இந்திய அணி உள்ளது. இந்தியா 18 ஆட்டங்களில் விளையாடி 10 இல் வெற்றியும், 5இல் தோல்வியும் 3 இல் டிராவும் பெற்றுள்ளது. மொத்தம் 127 புள்ளிகளை பெற்றுள்ளது இந்தியா.

மூன்றாவது இடத்தில் 100 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா உள்ளது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளும், டிரா ஆனால் 4 புள்ளிகளும் வழங்கப்பட்டன.

கடந்த வந்த பாதை

2021-2023 வரை இந்திய டெஸ்ட் அணியின் பயணத்தைப் பார்ப்போம்.

2021 ஆகஸ்டில் இங்கிலாந்தும், இந்தியாவும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 4 ஆட்டங்கள் 2021-லும், 2022 ஜூலையில் 5வது டெஸ்ட் ஆட்டமும் விளையாடப்பட்டது.

இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. கடைசி டெஸ்டில் இங்கிலாந்து ஜெயித்தது. இதனால், 2-2 என தொடர் சமன் ஆனது.

இந்தத் தொடரில் 2 ஆட்டங்களில் ஜெயித்தன் மூலம் 24 புள்ளிகளை பெற்றது இந்தியா.

பின்னர், நியூசிலாந்துடனான தொடரில் முதல் ஆட்டம் டிராவான போதிலும், அடுத்த ஆட்டத்தில் அஸ்வின் சுழலால் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடர் மூலம், இந்திய அணி 16 புள்ளிகளைப் பெற்றது.

தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா சரண்

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இந்திய அணி, ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் வென்றது. எஞ்சிய 2 டெஸ்ட்களில் தோற்றது. இந்த தொடரில் இரு அணிகளின் பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

தென்னாப்பிரிக்காவில் தொடரை இழந்தது இந்தியா. 12 புள்ளிகள் மட்டுமே இத்தொடரிலிருந்து கிடைக்கப் பெற்றது.

இலங்கையை ஊதித் தள்ளியது

இலங்கை அணியை இந்தியா ஊதித் தள்ளியது. கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில், சொந்த மண்ணில் வெற்றி கொடி நாட்டியது இந்தியா. இதன்மூலம், 24 புள்ளிகளை பெற்றது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.