Asian Games Tennis: ஆசிய கேம்ஸ் டென்னிஸில் ரோகன் போபண்ணா கூட்டணி தங்கம் வென்று அசத்தல்-ஸ்குவாஷிலும் தங்கம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games Tennis: ஆசிய கேம்ஸ் டென்னிஸில் ரோகன் போபண்ணா கூட்டணி தங்கம் வென்று அசத்தல்-ஸ்குவாஷிலும் தங்கம்

Asian Games Tennis: ஆசிய கேம்ஸ் டென்னிஸில் ரோகன் போபண்ணா கூட்டணி தங்கம் வென்று அசத்தல்-ஸ்குவாஷிலும் தங்கம்

Manigandan K T HT Tamil
Sep 30, 2023 03:53 PM IST

ஆசிய கேம்ஸ் 2023 போட்டியில் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவிலும், ஸ்குவாஷ் போட்டியில் ஆடவர் குழு பிரிவிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியுள்ளது.

தங்கப்பதக்கத்துடன் இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள்  (PTI Photo/Gurinder Osan) (PTI09_30_2023_000194A)
தங்கப்பதக்கத்துடன் இந்திய டென்னிஸ் நட்சத்திரங்கள் (PTI Photo/Gurinder Osan) (PTI09_30_2023_000194A) (PTI)

இதனிடையே, ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

ஹாங்சோ ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் டென்னிஸ் சென்டர் கோர்ட் 1 இல், போபண்ணா மற்றும் போசலே ஆகியோர் குறிப்பிடத்தக்க திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தினர். ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நீடித்த இந்த டென்னிஸ் போட்டி, பார்வையாளர்களை இருக்கைகளின் விளிம்பில் அமர வைத்தது என்றால் மிகையல்ல.

கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் போபண்ணா- ருதுஜா போஸ்லே ஜோடி தங்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது அபாரமான பதக்க வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி தங்கள் தைவான் சகாக்களான யு-சியோ ஹ்சு மற்றும் ஹாவோ-சிங் சான் ஆகியோரை வென்றது.

முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய ஜோடி ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும், அவர்களின் தைவான் எதிரிகள், மீள்திறனை வெளிப்படுத்தி, இரண்டாவது செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி வலுவான மறுபிரவேசம் செய்தனர்.

பதற்றமும், பரபரப்பும் நிறைந்த கடைசி செட்டில் போபண்ணா- போஸ்லே ஜோடி நிதானம் பெற்று தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இறுதியில் 10-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு 9-வது தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தனர்.

ஸ்குவாஷிலும் தங்கம்

இந்நிலையில், ஸ்குவாஷ் தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஆண்கள் அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.

இறுதிப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.