Glenn Maxwell: கிளென் மேக்ஸ்வெல் மனைவிக்கு வளைகாப்பு-வைரலாகி வரும் போட்டோஸ்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Glenn Maxwell: கிளென் மேக்ஸ்வெல் மனைவிக்கு வளைகாப்பு-வைரலாகி வரும் போட்டோஸ்

Glenn Maxwell: கிளென் மேக்ஸ்வெல் மனைவிக்கு வளைகாப்பு-வைரலாகி வரும் போட்டோஸ்

Manigandan K T HT Tamil
Jul 24, 2023 05:37 PM IST

திருமணத்தையும் இவர் பாரம்பரிய முறைப்படி செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸி., கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மனைவிக்கு நடந்த வளைகாப்பு
ஆஸி., கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் மனைவிக்கு நடந்த வளைகாப்பு (https://www.instagram.com/vini.raman/)

ஆர்சிபி அணியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மேக்ஸ்வெல் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேக்ஸ்வெல் பேட்டிங் செய்வதுடன் பந்துவீசும் திறன் கொண்டவர். மேக்ஸ்வெல் 2015 உலகக் கோப்பை மற்றும் 2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இருந்தார்.

2010 ஆம் ஆண்டில் பிக் பாஷ் தொடரில் விக்டோரியா அணிக்காக விளையாடத் தொடங்கியபோது அவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது வியத்தகு ஷாட்டிற்காக அறியப்பட்ட இவர், 2015 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக 52 பந்துகளில் 102 ரன்கள் பதிவு செய்து அசத்தினார். இது இன்றுவரை இரண்டாவது அதிவேக உலகக் கோப்பை சதமாகும்.

2016 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 65 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 145* ரன்கள் எடுத்தார்.

இது சர்வதேச இருபது20 போட்டிகளில் நான்காவது அதிகபட்ச ஸ்கோர் மற்றும் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக ஆரோன் ஃபின்ச் அடித்த 156 மற்றும் 172 ரன்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 339 ரன்களையும், 128 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3,490 ரன்களை குவித்துள்ளார்.

98 டி20 போட்டிகளில் ஆடி 2159 ரன்களையும் குவித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 60 விக்கெட்டுகளையும், டி20இல் 39 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.