India Second Innings: 'கலக்கிட்டாருப்பா நம்ம கேப்டன்'.. புதிய சாதனையும் படைத்தது ரோஹித்-ஜெய்ஸ்வால் கூட்டணி
தொடர்ச்சியாக 3 அரை சதங்களை விளாசியிருக்கிறார் ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா. இந்த சீசனில் அவர் அதிரடி காண்பித்து வருகிறார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
அற்புதமாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதையடுத்து, 183 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
வழக்கம் போல் யஷஸ்வி, ரோகித் அதிரடி காண்பித்தனர். ரோகித் சிறப்பாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார். 35 பந்துகளில் அவர் அரை சதம் பதிவு செய்தார்.
Hitman என அன்புடன் அழைக்கப்படும் ரோகித், முதல் டெஸ்டில் 221 பந்துகளில் 103 ரன்களும், இரண்டாவது டெஸ்டில் 143 பந்துகளில் 80 ரன்களும் பதிவு செய்தார். தற்போது 2வது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 44 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதன்மூலம், கேப்டன் ரோகித் பழைய ஃபார்முக்கு திரும்பியது உறுதியாகியுள்ளது.
மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்ககாக அதிவேகமாக 50 ரன்கள் குவித்த ஓபனிங் கூட்டணி என்ற சாதனையை படைத்துள்ள ரோகித்-யஷஸ்வி கூட்டணி.
ரோகித்தின் விக்கெட்டை கேப்ரியல் எடுத்தார். யஷஸ்வி, கில் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர். மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இரவு 10 மணி நிலவரப்படி 12 ஓவர்களில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து 281 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரை கேப்டன் பிராத்வைட் மட்டுமே 75 ரன்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
முகேஷ் குமார், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடட்டில் நடந்து வருகிறது.
கடந்த 20ம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 438 ரன்கள் எடுத்து இரண்டாவது நாளில் ஆல் அவுட் ஆனது.
500 ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 121 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 61 ரன்களும், ஜெய்ஸ்வால் 57 ரன்களும், அஸ்வின் 56 ரன்களும் அடித்திருந்தனர்.
இரு அணிகளுக்கு இடையே இந்த டெஸ்ட் 100வது போட்டியாகும்.
முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் கேமார் ரோஜ், ஜோமேல் வாரிகன் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள், ஜாசன் ஹோல்டர் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ஓவர்களில் 86 ரன்கள் எடுத்திருந்தது.
ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் தொடக்க வீரரான தேஜ் நரின் சந்தர்பால் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் மூன்றாவது நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நல்ல தொடக்கத்தோடு சிறப்பாக விளையாடினர்.
மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் 108 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது 37 ரன்களுடன் அலிக் அதானேஷ், 11 ரன்களுடன் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இன்று நடந்த 4வது நாள் ஆட்டத்தில் மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன.
23.4 ஓவர்களில் 6 மெய்டன் ஓவர்களை வீசினார் முகமது சிராஜ். 60 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இந்தியா விளையாடி வருகிறது.
டாபிக்ஸ்