தமிழ் செய்திகள்  /  Sports  /  Pvl 2024: Chennai Blitz Beat Kolkata Thunderbolts

PVL 2024: வெற்றிப்பயணத்தை தொடரும் அகமதாபாத், சென்னை அணிகள் - கணக்கை தொடங்காத கொல்கத்தா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 23, 2024 03:15 PM IST

நடப்பு சாம்பியனான அகமதாபாத் டிபெண்டர்ஸ் ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ் அணியையும், சென்னை பிளிட்ஸ் அணி, கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணியையும் வீழ்த்தி வெற்றி பயணத்தை தொடர்ந்து வருகிறது.

கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை பிளிட்ஸ் வீரர்கள்
கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை பிளிட்ஸ் வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையடுத்து இந்த தொடரில் நடப்பு சாம்பியன் அகமதாபாத் டிபெண்டர்ஸ் இதுவரை தோல்வியை சந்திக்காத அணியாக இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றியை பெற்று முதல் இடத்தில் உளளது.

பிப்ரவரி 22ஆம் தேதி ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதன்படி 17-15, 15-13, 15-11 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

இதேநாளில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் சென்னை பிளிட்ஸ் 3-2 என்ற கணக்கில் கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 14-16, 21-20, 15-5, 17-19, 15-8 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை அணி வென்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பெற்று அகமதாபாத், சென்னை அணிகள் வெற்றி பயணத்தை தொடர்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்