Artic Open: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை அரையிறுதிக்கு தகுதி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Artic Open: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை அரையிறுதிக்கு தகுதி

Artic Open: பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை அரையிறுதிக்கு தகுதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 14, 2023 05:57 PM IST

ஆர்டிக் ஓபன் காலிறுதி போட்டியில் 91 நிமிடகள் போராடி வியாநாம் வீராங்கனையை நெருக்கமான புள்ளிகளில் வீழ்த்தியுள்ளார் இந்தியாவின் பிவி சிந்து

பிவி சிந்து (கோப்புப்படம்)
பிவி சிந்து (கோப்புப்படம்) (PTI)

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 20-22, 22-20, 21-18 என்ற செட்கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்றார். முதல் செட்டில் தோல்வியை தழுவிய போதிலும் அடுத்தடுத்த இரண்டு செட்களில் மீண்டெழுந்து வெற்றியை பெற்றார். இவர்கள் இருவருக்கும் இடையிலான இந்தப் போட்டி 91 நிமிடங்கள் வரை நீடித்தது.

இந்த போட்டியில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், நெருக்கமான புள்ளிகளில் பிவி சிந்து வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து இன்று நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டியில் சீனாவின் வாங் ஜி யி என்பவரை எதிர்கொள்கிறார்.

ஆர்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, கலவை இரட்டையர் என அனைத்திலும் இந்தியா வெளியேறியுள்ளது. தற்போது பிவி சிந்து மட்டும் இந்தியா சார்பில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் உள்ளார்.

எனவே அவர் இன்றைய போட்டியில் சீன வீராங்கனையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.