அதிக சம்பளம் பெறும் வீராங்கனை - பி.வி. சிந்து 12வது இடம்! முதல் இடம் யாருக்கு?
PV Sindhu:உலக அளவில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகளின் போபர்ஸ் நிறுவன பட்டியலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து 12வது இடத்தை பிடித்துள்ளார். ஆண்டுக்கு ரூ. 58 கோடி வரை பணம் சம்பளமாக பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பல்வேறு வெற்றிகளை குவித்து இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களை பெற்று தந்துள்ளார். இந்தியாவுக்காக இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை பெற்று தந்த பிவி சிந்து கடந்த ஆண்டில் அதிக சம்பளம் பெற்ற வீராங்கனைகள் லிஸ்டில் 12வது இடத்தை பிடித்துள்ளார்.
இவர் களத்தில் ரூ. 82 லட்சமும், களத்துக்கு வெளியே ரூ. 57.5 கோடி வரை சம்பளமாக பெறுவதாக போபர்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் ஆண்டுக்கு ரூ. 420 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவருக்கு அடுத்தபடியாத அமெரிக்கா டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் ரூ. 339 கோடி சம்பளம் பெற்று இரண்டாவது இடத்திலும், மற்றொரு அமெரிக்க வீராங்கனையும் பனிச்சறுக்கு விளையாட்டில் ப்ரீ ஸ்டைல் ஸ்கையருமான எய்லின் கூ என்பவர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து, கடந்த 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஓபன் கோப்பை, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் தங்கம், சுவிஸ் ஒபன் கோப்பை, ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளார்.
டாபிக்ஸ்