Neymar: ரொனால்டாவுக்கு பிறகு சவுதி கிளப் அணியில் இணையும் ஸ்டார் வீரர் நெய்மார் - சம்பளமாக எவ்வளவு கோடி தெரியுமா?
சவுதி கால்பந்து லீக் தொடரில் விளையாடி வரும் அல்-ஹிலால் அணியில் இரண்டு சீசன்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார்.

பிரேசில் கால்பந்து அணி நட்சத்திர வீரர் நெய்மார், பிரான்ஸை சேர்ந்த பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணிக்கு விளையாடி வருகிறார். பிஎஸ்ஜி என்று அழைக்கப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப்புக்காக கடந்த ஆறு ஆண்டுகள் விளையாடி வந்த அவர் தற்போது அல்ஹிலால் கிளப் அணியில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதற்காக அவருக்கு சம்பளமாக இந்திய மதிப்பில் ரூ. 900 கோடி ஊதியம் வழங்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சவுதி அரேபியா புரோ கால்பந்து லீக்கில் இரண்டு சீசன்கள் நெய்மார் அல்-நிசார் அணிக்காக விளையாடவுள்ளார்.
ஏற்கனவே, சவுதி கிளப் அணியான அல்-நசர் என்ற அணியில் போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார். வரலாற்றிலேயே யாருக்கும் கொடுக்காத மிகப் பெரிய விலையை அளித்து அல்-நசர் நிர்வாகம் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளார்.