PKL 2023 Prize Money: ப்ரோ கபடி லீக் பரிசுத் தொகை அதிகரிப்பு.. சாம்பியன் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2023 Prize Money: ப்ரோ கபடி லீக் பரிசுத் தொகை அதிகரிப்பு.. சாம்பியன் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

PKL 2023 Prize Money: ப்ரோ கபடி லீக் பரிசுத் தொகை அதிகரிப்பு.. சாம்பியன் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

Manigandan K T HT Tamil
Nov 27, 2023 01:34 PM IST

யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், டபாங் டெல்லி கே.சி ஆகிய அணிகள் தலா 1 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது.

ப்ரோ கபடி லீக் போட்டி
ப்ரோ கபடி லீக் போட்டி (www.prokabaddi.com)

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 10வது கபடி சீசன் போட்டிகள் அகமதாபாத், ஹைதராபாத், சென்னை, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் பஞ்ச்குலா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

ப்ரோ கபடி லீக்கின் பத்தாவது சீசன் வரும் டிசம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் போன்று கபடி விளையாட்டை பிரபலப்படுத்தும் விதமாகவும், இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் புரோ கபடி லீக் போட்டிகள் 2014 முதல் நடைபெற்று வருகிறது.

புரோ கபடி லீக் சீசன் 10 தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. பாட்னா பைரேட்ஸ் 3 முறையும், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் 2 முறையும் ஜெயித்திருக்கின்றன.

யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், டபாங் டெல்லி கே.சி ஆகிய அணிகள் தலா 1 முறை சாம்பியன் ஆகியிருக்கிறது.

புரோ கபடி லீக்கின் சீசன் 10 டிசம்பர் 2, 2023 அன்று அகமதாபாத்தில் உள்ள அரீனா பை டிரான்ஸ்ஸ்டேடியா ஸ்டேடியத்தில் தொடங்க உள்ளது மற்றும் பிப்ரவரி 21, 2024 வரை இப்போட்டி நடைபெறும். தொடக்க ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும், மேலும் ரசிகர்கள் போட்டியைக் கண்டு ரசிக்க PKL ப்ரோ கபடி டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கலாம்.

பரிசு விவரம்:

முந்தைய சீசனின் ப்ரோ கபடி லீக் வெற்றியாளருக்கு 3 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் முறையே 1.80 கோடி மற்றும் 1.20 கோடி பெற்றனர்

இந்த சீசனில் ப்ரோ கபடி லீக்கிற்கு மொத்தம் ரூ.8 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீசன் 10ல் வெற்றி பெறும் அணிக்கு ரூ. 3 கோடியும், ரன்னர்-அப் அணி ரூ.1.8 கோடியும் பெறும். ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் இருப்பவர்களுக்கு தலா ரூ.45 லட்சமும், அரையிறுதியில் வெளியேற்றப்படும் அணிகள் தலா ரூ.90 லட்சமும் பரிசாக பெறும்.

நேரலை

புரோ கபடி லீக் 2023 சீசன் 10, நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ப்ரோ கபடி லீக்கின் சீசன் 10 இன் நேரடி ஒளிபரப்பை செய்கிறது, இதனால் கபடி விளையாட்டுகளின் ஒவ்வொரு பரபரப்பான தருணத்தையும் ரசிகர்கள் அனுபவிக்க முடியும்.

கூடுதலாக, ரசிகர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் போட்டிகளை கண்டு ரசிக்க முடியும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.