Pro Kabaddi League 2023: தொடர்ச்சியாக 2வது வெற்றியை ருசித்தது குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் ஏமாற்றம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pro Kabaddi League 2023: தொடர்ச்சியாக 2வது வெற்றியை ருசித்தது குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் ஏமாற்றம்

Pro Kabaddi League 2023: தொடர்ச்சியாக 2வது வெற்றியை ருசித்தது குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் ஏமாற்றம்

Manigandan K T HT Tamil
Dec 03, 2023 10:37 PM IST

ப்ரோ கபடி லீக் போட்டியின் 4வது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் ஜெயித்துள்ளது.

குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் வீரர்கள்
குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் வீரர்கள் (@ProKabaddi)

முன்னதாக, புரோ கபடி லீக் சீசன் 10 இன் தனது தொடக்க ஆட்டத்தில் ட்ரான்ஸ்ஸ்டேடியாவின் ஈகேஏ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் 38-32 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்நிலையில், இன்று நடந்த தனது இரண்டாவது போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத்.

ஆரம்பம் முதலே இரு அணிகளும் புள்ளிகளை விட்டுக் கொடுக்காமல் மாறி மாறி சமநிலையில் இருந்து வந்தது. எனினும், கடைசி நேரத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை அள்ளினர். இவ்வாறு ஆட்ட நேர முடிவில் அந்த அணி பெங்களூரு புல்ஸை வெற்றி கொண்டது.

இதனிடையே, தமிழ் தலைவாஸ் vs தபாங் டெல்லி இடையேயான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 42-31 என்ற புள்ளிக் கணக்கில் ஜெயித்தது. தமிழ் தலைவாஸ் மற்றும் தபாங் டெல்லி ஆகியவை தங்களது புரோ கபடி லீக் 2023 போட்டியின் முதல் ஆட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 4) எதிர்கொண்டது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ்ஸ்டேடியாவின் தி அரினாவில் இரவு நடந்த முதல் போட்டியில் இரு அணிகளும் மோதின.

 

தமிழ் தலைவாஸ் தங்கள் சீசனைத் தொடங்குவதற்கு இது ஒரு அற்புதமான வெற்றியாகும். அவர்கள் தங்கள் பிகேஎல் 2023 தொடக்க போட்டியை தபாங் டெல்லியை 42-31 என்ற கணக்கில் வென்று தொடங்கியிருக்கின்றனர்.

புரோ கபடி லீக் 10வது சீசன் கோலாகலமாக நேற்று தொடங்கியது. இதையடுத்து இந்த சீசனின் இரண்டாவது போட்டியில் யு மும்பா - யுபி யோதாஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 34 - 31 புள்ளி கணக்கில் யு மும்பா அணி வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் ரெய்ட் புள்ளிகளாக தலா 19 பாயிண்ட்களை பெற்றன. அதேபோல் இரண்டு அணிகளும் சூப்பர் ரெய்ட் புள்ளிகள் எடுக்கவில்லை.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.