Pro kabaddi league 2023: ப்ரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் ஹாட்ரிக் வெற்றி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pro Kabaddi League 2023: ப்ரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் ஹாட்ரிக் வெற்றி

Pro kabaddi league 2023: ப்ரோ கபடி லீக்: குஜராத் ஜெயன்ட்ஸ் ஹாட்ரிக் வெற்றி

Manigandan K T HT Tamil
Dec 05, 2023 09:33 PM IST

ப்ரோ கபடி லீக் 2023, டிசம்பர் 5 அன்று குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யு மும்பா இடையேயான போட்டி நடந்தது.

யு-மும்பா வீரரை மடக்கி பிடிக்கும் குஜராத் அணியினர்
யு-மும்பா வீரரை மடக்கி பிடிக்கும் குஜராத் அணியினர் (@ProKabaddi)

குஜராத் ஜெயன்ட்ஸுக்கு இது ஹாட்ரிக் வெற்றி, அந்த அணி வீரர் சோனுவுக்கு சூப்பர் 10களில் ஹாட்ரிக். கேப்டனாக தனது 100வது போட்டியில் சுல்தான் மற்றொரு வெற்றியைப் பெறுகிறார்.

முன்னதாக, புரோ கபடி லீக் (பிகேஎல்) 2023 செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் உள்ள ஈகேஏ அரங்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யு மும்பா இடையே பரபரப்பான மோதலாக இருந்தது. இரு அணிகளும் சீசனில் நம்பிக்கைக்குரிய தொடக்கத்தை ஏற்படுத்தி இருந்தன என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது, மேலும் இந்த சந்திப்பு ஒரு நெருக்கமான போட்டியாக இருந்தது.

குஜராத் ஜெயண்ட்ஸ் தனது தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பெற்றதன் மூலம் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. 

மறுபுறம், யு மும்பா, உ.பி. யோத்தாஸுக்கு எதிரான வெற்றியில் தனது ஆல்ரவுண்ட் பலத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதியில் ஆல்-அவுட் ஆகி 19 புள்ளிகளைக் கைப்பற்றி ஆரம்பத்திலேயே ஆட்டத்தின் கட்டுப்பாட்டை எடுத்தது. இரண்டாவது பாதியில் யோதாஸ் முயற்சி செய்த போதிலும், யு மும்பாவின் நிலையான ஆட்டம் 34-31 என்ற புள்ளிகள் வெற்றிக்கு வழிவகுத்தது.

குஜராத் ஜெயன்ட்ஸின் சண்டை மனப்பான்மையும், யு மும்பாவின் ஆல்ரவுண்ட் செயல்திறனும் போட்டியை நெருக்கமான மோதலுக்கு களம் அமைத்து கொடுத்தது. இரு அணிகளும் தங்கள் வெற்றியைத் தக்கவைக்க முயற்சித்ததால், பரபரப்பாக நகர்ந்தது.

முடிவில் யு மும்பா தோல்வியைத் தழுவியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.