தமிழ் செய்திகள்  /  Sports  /  Prannoy Beats Chinese Taiper Wang Tzu Wei And Moves Semifinal For India Open First Time

India open: முதல் முறையாக இந்தியா ஓபன் தொடர் அரையிறுதிக்கு தகுதி பெற்ற பிரனாய்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 20, 2024 03:04 PM IST

இந்தியா ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் சீனா தைபே வீரர் வாங் ஸூ வே என்பவரை வீழ்த்தி இந்திய வீரர் எச்எஸ் பிரனாய் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

சீனா தைபே வீரர் வாங் ஸூ வே-க்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் எச்எஸ் பிரனாஸ்
சீனா தைபே வீரர் வாங் ஸூ வே-க்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் எச்எஸ் பிரனாஸ் (Ayush Sharma)

ட்ரெண்டிங் செய்திகள்

மூன்று சுற்றுகள் இருவருக்கும் இடையிலான போட்டி நடந்த நிலையில், சுமார் 77 நிமிடங்கள் நீடித்தன.

முதல் சுற்றில் 21-11 என ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றார் பிரனாய். இதையடுத்து இரண்டாவது சுற்றில் கம்பேக் கொடுத்த வாங் ஸூ வே, 21-17 என்ற கணக்கில் பிரனாயை வீழ்த்தினார்.

பரபரப்பான கட்டத்தில் இருவரும் மூன்றாவது சுற்றில் மோதினர். பிரனாய், வாங் ஸூ வே ஆகியோர் மாறி மாறி புள்ளிகளை பெற போட்டி கடினமாகவே சென்றது. இறுதியில் தொடர் புள்ளிகளை பெற்ற முன்னேறிய பிரனாய் அதை அப்படியே தக்க வைத்து இறுதியில் 21-18 என்ற கணக்கில் வெற்றியும் பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இந்தியராக அரையிறுதிக்குள் நுழைந்தார். அத்துடன் இந்தியா ஓபன் பேட்மிண்டந் தொடரில் முதல் முறையாக அரையிறுதி போட்டியில் விளையாட இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்