PM Modi: ‘ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை’ - பிரதமர் மோடி பெருமிதம்!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pm Modi: ‘ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை’ - பிரதமர் மோடி பெருமிதம்!

PM Modi: ‘ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை’ - பிரதமர் மோடி பெருமிதம்!

Karthikeyan S HT Tamil
Oct 07, 2023 11:01 AM IST

ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும், விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கும் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெண்கள் கபடி இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 26-25 என்ற புள்ளி கணக்கில் சின தைபே அணியை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் மூலம் ஆசிய விளையாட்டு தொடரில் இந்தியாவுக்கு இன்று (அக்.07) 100வது பதக்கம் கிடைத்துள்ளது.

இந்த வரலாற்று வெற்றியை “மிகச்சிறந்த” சாதனை எனக் குறிப்பிட்டு  பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்களுக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய சாதனை. 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்தவும், வரும் 10-ம் தேதி நமது விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 25 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 100 பதக்கங்களை  வென்று பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, கிரிக்கெட், ஹாக்கி, கபடி என பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வாங்கி குவித்து பெருமை சேர்த்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றது.

ஒலிம்பிக், காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு ஆகிய மூன்று சர்வதேச விளையாட்டுகளில் இந்தியா 100 பதக்கங்களுக்கு மேல் வெல்வது இது இரண்டாவது முறையாகும். 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 101 பதக்கங்களை வென்றிருந்தது. 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.