தமிழ் செய்திகள்  /  Sports  /  Pkl 2024: U Mumba Vs Haryana Steelers Match Went Draw After Full Time

PKL 2024: பரபரப்பு குறையாத யு மும்பா - ஹரியானா ஸ்டீலர்ஸ் போட்டி டிராவில் முடிவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 10, 2024 11:30 PM IST

இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற பரபரப்பாக சென்ற யு மும்பா - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்தது.

பரபரப்பான ஆட்டத்துக்கு இடையே யு மும்பா - ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர்கள்
பரபரப்பான ஆட்டத்துக்கு இடையே யு மும்பா - ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருந்து வருகிறது யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முன்னேற்றம் பெறும் என இருந்த நிலையில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதியில் ஹிரியானா அணியும், இரண்டாவது பாதியில் யு மும்பா அணியும் அதிக புள்ளிகளை பெற்றன. முழு ஆட்ட நேர முடிவில் 44-44 என ஒரே புள்ளிகளை இரண்டு அணிகளும் பெற ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்த போட்டியில் யு மும்பா அணி 24 ரெயிட், 14 டேக்கிள், 11 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட், எக்ஸ்ட்ரா புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 22 ரெயிட், 18 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளிகளையும் பெற்றது.

இந்த போட்டி டிராவில் முடிவுற்ற நிலையில் இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் அதே இடத்தில் நீடித்து வருகிறது. தற்போதையை நிலையில் யு மும்பா, ஹரியானா ஸ்டீலர்ஸ் இதுவரை 11 போட்டிகள் விளையாடி தலா 6 வெற்றிகளை பெற்றுள்ளது. இதில் யு மும்பா 35, ஹரியானா ஸ்டீலர்ஸ் 34 பாயிண்ட்களை பெற்றுள்ளது. எனவே ஒரு புள்ளி அதிகமாக பெற்றிருக்கும் யு மும்பா 5வது இடத்திலும், ஹரியானா 6வது இடத்திலும் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்