தமிழ் செய்திகள்  /  Sports  /  Pkl 2024: U Mumba Loss Against Jaipur Pink Panthers After Five Continious Loss

PKL 2024: 10 புள்ளிகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி! ஜெயிப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியிடம் வீழ்ந்த யு மும்பா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 06, 2024 10:05 PM IST

பெங்களுர் புல்ஸ் அணிக்கு எதிராக நேற்று விளைாடிய போட்டியில் அதிரடி காட்டிய யு மும்பா, ஜெயிப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிக்கு எதிராக இன்று விளையாடிய போட்டியில் பணிந்தது.

யு மும்பா வீரரை மடக்கி பிடிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர்கள்
யு மும்பா வீரரை மடக்கி பிடிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இரு அணிகளும் டாப் 5 இடத்தில் இருந்ததால் போட்டி சூடுபிடிக்கும் விதமாகவே இருந்தது. இரு அணிகளும் மாறி மாறி ரெயிட், டேக்கிள் செய்து புள்ளிகளை பெற்ற போதிலும் ஜெயிப்பூர் தொடர்ந்து முன்னிலை வகித்தது. முழு ஆட்ட நேர முடிவில் 41-31 என்ற புள்ளி கணக்கில் ஜெயிப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வெற்றி பெற்றது. தொடர்ந்து 5 வெற்றிகளை பெற்ற யு மும்பா 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

இந்த போட்டியில் ஜெயிப்பூர் பிங்க் பேந்தர்ஸ் 26 ரெயிட், 10 டேக்கிள், 4 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளியும் பெற்றது.

யு மும்பா அணி 27 ரெயிட், 3 டேக்கிள், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட், சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெறவில்லை.

ஜெயிப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர் அர்ஜுன் ஜெய்ஷ்வால் 16 ரெயிட், ஒரு ஒரு போனஸ் என 17 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார்.

தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றி சிறப்பாக செயல்பட்டு வந்த யு மும்பா, 10 புள்ளிகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய தோல்வியை தழுவியது. அதேபோல் சீசனின் 6வது வெற்றியை பதிவு செய்த ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்