PKL 2024: அடிச்சு தூக்கிய தமிழ் தலைவாஸ்! 19 புள்ளிகளில் யுபி யோதாஸை வீழ்த்தி தரமான வெற்றி-pkl 2024 tamil thalaivas beat up yoddhas after 7 straight loss - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2024: அடிச்சு தூக்கிய தமிழ் தலைவாஸ்! 19 புள்ளிகளில் யுபி யோதாஸை வீழ்த்தி தரமான வெற்றி

PKL 2024: அடிச்சு தூக்கிய தமிழ் தலைவாஸ்! 19 புள்ளிகளில் யுபி யோதாஸை வீழ்த்தி தரமான வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 10, 2024 11:14 PM IST

தொடர்ச்சியாக 7 தோல்விகள், இதில் இரண்டு போட்டிகளில் வெற்றியை ஒரு புள்ளியில் நழுவவிட்ட தமிழ் தலைவாஸ் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக இருக்கும் நிலையில் 19 புள்ளிகள் வித்தியாசத்தில் யுபி யோதாஸ் அணியை வீழ்த்திதரமான வெற்றியை பெற்றுள்ளது.

யுபி யோதாஸ் வீரரை மடக்கி பிடிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்
யுபி யோதாஸ் வீரரை மடக்கி பிடிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்

தமிழ் தலைவாஸ் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இந்த ஆட்டம் அமைந்திருந்தது. இதை சரியாக உணர்ந்த தமிழ் தலைவாஸ் வீரர்கள் முதல் பாதி, இரண்டாம் பாதி என யுபி யோதஸ் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை குவித்தனர். ஆரம்பத்தில் இருந்தே மிகப் பெரிய முன்னிலையுடனே புள்ளிகளை பெற்றது தமிழ் தலைவாஸ். முழு ஆட்ட நேர முடிவில் 46-27 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ், யுபி யோதாஸ் அணியை வீழ்த்தியது.

தொடர்ச்சியாக 7 தோல்விகளுக்கு பிறகு 19 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் தரமான வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக டிசம்பர் 13ஆம் தேதி தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ். இதையடுத்து தற்போது கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் அடுத்த வெற்றியை பெற்றுள்ளது.

இதற்கிடையே ஜெயிப்பூர் பிங்க் பேந்தர்ஸ், பெங்களுரு புல்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றி அருகே சென்று ஒரு புள்ளியில் தோல்வியை தழுவியது.

இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் 22 ரெயிட், 18 டேக்கிள், 6 ஆல்அவுட் புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட், எக்ஸ்ட்ரா புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.

யுபி யோதாஸ் அணி 18 ரெயிட், 9 டேக்கிள் புள்ளிகளை பெற்றது. ஆல் அவுட், எக்ஸ்ட்ரா புள்ளிகள், சூப்பர் ரெயிட் புள்ளிகள் என எதுவும் பெவில்லை.

தமிழ் தலைவாஸ் அணியை சேர்ந்த ரெய்டரான நரேந்தர் 11 ரெயட், 3 போனஸ் என மொத்தம் 14 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார்.

தமிழ் தலைவாஸ் அணிக்கு இது தொடரின் மூன்றாவது வெற்றியாக அமைந்திருக்கும் நிலையில், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 11வது இடத்தில் நீடிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.