Tamil Thalaivas: ஹாட்ரிக் வெற்றி! அரைசதத்தை கடந்த புள்ளிகள் - தெலுங்கு டைட்டன்ஸை சுருட்டி தள்ளிய தமிழ் தலைவாஸ்
ப்ரோ கபடி லீக் 2024 இரண்டாம் பாதியில் அற்புதமாக விளையாடி வரும் தமிழ் தலைவாஸ் வீரர்கள் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளனர். இந்த சீசனில் இரண்டு போட்டிகளிலும் தெலுங்கு வாரியர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளனர்.
ப்ரோ கபடி லீக் 2024 தொடர் ஹைதராபாத்திலுள்ள கச்சபவுலி இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொடரின் 88வது போட்டியில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத்தில் நடைபெறும் கடைசி போட்டியாக இது அமைந்தது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 25 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டத்தில் முதல் பாதி, இரண்டாம் பாதி என இரண்டிலும் தமிழ் தலைவாஸ் கை ஓங்கி இருந்தன. அதிலும் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மட்டும் 34 புள்ளிகளை பெற்று அசத்தியது. போட்டி முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த தமிழ் தலைவாஸ் வீரர்கள் ரெயிட், டேக்கிள் என இரண்டிலும் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முழு ஆட்ட நேர முடிவில் 54-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் வீழ்த்தியது. இந்த சீசனில் 50க்கும் புள்ளிகளை ஒரு அணி பெற்ற போட்டியாக இன்றைய ஆட்டம் அமைந்தது.
முதல் பாதி, இரண்டாம் பாதி ஆகியவற்றில் ரெயிட், டேக்களில் ஆகிய இரண்டிலும் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை வகித்தது. தமிழ் தலைவாஸ் அணிக்கு ஈடு கொடுக்கும் வகையில் விளையாடாத போதிலும் 2 சூப்பர் ரெயிட் புள்ளிகளை தெலுங்கு டைட்டன்ஸ் பெற்றது
இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 23 ரெயிட், 24 டேக்கிள், 6 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை. டேக்கிள் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் இன்று சிறப்பாக செயல்பட்டது.
தெலுங்கு டைட்டன்ஸ் அணி 19 ரெயிட், 10 டேக்கிள் புள்ளிகளை மட்டும் பெற்றது. ஆல்அவுட், எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெறவில்லை. அத்துடன் 2 சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெற்றது.
தமிழ் தலைவாஸ் ரெயிடர் அஜிங்கியா பவார் 8 ரெயிட், 2 டேக்கிள், ஒரு போன்ஸ் புள்ளிகள் என மொத்தம் 11 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார்.
ப்ரோ கபடி லீக் தொடரின் இந்த சீசனில் முதல் பாதியில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றது. இதையடுத்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்றுள்ளது. அதுவும் ஹாட்ரிக் வெற்றியாக அமைந்துள்ளது. தற்போது 15 போட்டிகளில் 6 வெற்றி, 35 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.
தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு இந்த சீசன் மிகவும் மோசமாக அமைந்திருக்கும் நிலையில் இதுவரை 16 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்