Tamil News  /  Sports  /  Pkl 2024: Tamil Thalaivas Beat Bengaluru Bulls By 17 Points Difference

PKL 2024: பெங்களுரு புல்ஸை போட்டு தாக்கிய தமிழ் தலைவாஸ்! 17 புள்ளிகளில் அபார வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 21, 2024 10:30 PM IST

பெங்களுருக்கு எதிராக ரெயிட், டேக்கிள் என இரண்டிலும் தமிழ் தலைவாஸ் வீரர்கள் துல்லியமாக செயல்பட்டார்கள். இதன் விளைவாக சீசனின் ஐந்தாவது வெற்றியும் கிடைத்துள்ளது.

பெங்களுரு வீரரை தப்பிக்க விடாமல் மடக்கி பிடிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்
பெங்களுரு வீரரை தப்பிக்க விடாமல் மடக்கி பிடிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய ஆட்டத்தின் முதல் பாதி, இரண்டாம் பாதி என இரண்டிலும் தமிழ் தலைவாஸ் கை ஓங்கி இருந்தது. ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற தமிழ் தலைவாஸ், கணிசமான புள்ளிகள் வித்தியாசத்துடனே முன்னோக்கி சென்றது. தமிழ் தலைவாஸ் ரெயிடர்களான நரேந்தர், அஜிங்கியா பவார் ஆகியோர் பெங்களுரு புல்ஸ் அணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார்கள். இருவரும் ரெயிடில் பட்டையை கிளப்பிய நிலையில் முழு ஆட்ட நேர முடிவில் 45-28 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களுரு புல்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் வீழ்த்தியது. 17 புள்ளிகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றி இந்த ஆட்டம் தமிழ் தலைவாஸ் அணிக்கு அமைந்தது.

முதல் பாதி, இரண்டாம் பாதியில் ரெயிட், டேக்கிள் என இரண்டிலும் தமிழ் தலைவாஸ் அணி, பெங்களுரு புல்ஸ் அணியை விட முன்னிலை பெற்றது. இதன் மூலம் ஆட்டம் முழுவதையும் தமிழ் தலைவாஸ் வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 25 ரெயிட், 15 டேக்கிள், 4 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

அதே போல் பெங்களுரு புல்ஸ் அணி 22 ரெயிட், 3 டேக்கிள், 2 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. அத்துடன் ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளியும் பெற்றது.

தமிழ் தலைவாஸ் ரெய்டரான நரேந்தர் 9 ரெயிட், 1 டேக்கிள், 4 போனஸ் என மொத்தம் 14 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார்.

இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்ற தமிழ் தலைவாஸ் அடுத்து வரிசையாக 7 தோல்விகளை தழுவியது. இதைத்தொடர்ந்து தற்போது கடைசி 4 போட்டிகளில் 3 வெற்றி, அடுத்தடுத்து 2 வெற்றி என சறுக்கலில் இருந்து மீண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது 14 போட்டிகளில் 5 வெற்றி, 30 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

பெங்களுரு புல்ஸ் 15 போட்டிகளில் 6 வெற்றியுடன், 9வது இடத்தில் உள்ளது.  

முன்னதாக, இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் - பெங்களுரு புல்ஸ் மோதிக்கொண்ட முந்தைய போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது தமிழ் தலைவாஸ். அந்த தோல்விக்கு பதிலடி தரும் விதமாக இந்த வெற்றியானது அமைந்துள்ளது.

இந்த சீசனில் இரு அணிகளும் மோதிக்கொண்ட மோதலில் இரண்டு அணிகளும் வெற்றியை பதிவு செய்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

WhatsApp channel

டாபிக்ஸ்