Tamil News  /  Sports  /  Pkl 2024: Puneri Paltan Beat Telugu Titans Second Time In This Season

PKL 2024: தெறிக்கவிடும் ஆட்டம்! தெலுங்கு டைட்டன்ஸை விரட்டியடித்த புனேரி பல்தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 30, 2024 11:00 PM IST

கடந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற முடியாவிட்டாலும் டிரா செய்திருந்தது புனேரி பல்தான் அணி. தெலுங்கு டைட்ன்ஸுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பழைய பார்மை தொடர்ந்து வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

தெலுங்கு டைட்டன்ஸ் வீரர் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் புனேரி பல்தான் வீரர்
தெலுங்கு டைட்டன்ஸ் வீரர் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் புனேரி பல்தான் வீரர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீசனில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தெலுங்கு டைட்டன்ஸ், தொடர்ச்சியாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. இனி எஞ்சியிருக்கும் போட்டிகளில் அந்த அணி வென்றால் கூட ப்ளே வாய்ப்பானது கடினமாகவே உள்ளது. 

இதற்கிடையே உச்சகட்ட பார்மில் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அணியாக இருந்து வரும் புனேரி பல்தான் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி அருகே சென்று டிரா செய்தது புனேரி பல்தான். இதனால் வெற்றி பாதைக்கு மீண்டும் திரும்பு வேண்டும் என்கிற முனைப்பில் களமிறங்கியது.

இன்றைய ஆட்டத்தில் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி ரெயிட், டேக்கிள் என புனேரி பல்தான் அணி முன்னிலை வகித்தது. முதல் பாதியில் ஒற்றை இலக்கத்தில் புள்ளிகள் பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ், இரண்டாம் பாதியில் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டது. ஆனாலும் புனேரி பல்தான் வீரர்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாக ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

போட்டி முழுவதிலும் ஆதிக்கம் செலுத்திய புனேரி பல்தான் டாப் அணி என நிருபிக்கும் விதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முழு ஆட்ட நேர முடிவில் 60-29 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது புனேரி பல்தான். இந்த சீசனில் தெலுங்கு டைட்ன்ஸுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் புனேரி பல்தான் வெற்றியடைந்துள்ளது. இரு அணிகள் மோதிக்கொண்ட முதல் போட்டியில் 54-18 என்ற புள்ளிக் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் மோசமான தோல்வியை தழுவியது. இன்று நடைபெற்ற போட்டியிலும் 31 புள்ளிகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.

இன்றைய போட்டியில் புனேரி பல்தான் அணி 27 ரெயிட், 20 டேக்கிள், 8 ஆல்அவுட், 5 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளியை பெறவில்லை.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி 17 ரெயிட், 8 டேக்கிள், 2 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளியை பெற்றது. இன்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ரெயிடில் சிறப்பாகவே செயல்பட்டனர்.

புனேரி பல்தான் வீரர் ஆகாஷ் ஷிண்டே 8 ரெயிட், 3 போன்ஸ் புள்ளிகள் என மொத்தம் 11 புள்ளிகளை பெற்றார். அதே போல் தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் சஞ்சீவி 8 ரெயிட் என 8 புள்ளிகள் பெற்றார். இந்த இருவரும் தங்களது அணியில் டாப் வீரர்களாக உள்ளார்கள்.

ப்ரோ கபடி லீக் 2024 தொடரில் ஆரம்பத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தால் எதிரணியை திணறவைக்கும் அணியாக புனேரி பல்தான் இருந்து வருகிறது. தற்போது 16 போட்டிகளில் 12 வெற்றியை பெற்றிருக்கும் அந்த அணி, தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

புனேரி பல்தான் அணிக்கு அப்படியே நேர் எதிராக தெலுங்கு டைட்டன்ஸ் சீசன் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியாக இருந்து வருவதுடன், 17 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி அணியாக இருந்து வருகிறது.

ப்ரோ கபடி லீக் 2024 தொடரில் இரண்டு போட்டிகள் நாளை நடைபெற இருக்கின்றன. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - பெங்களுரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோத இருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்