PKL 2024: ஒரு தடவதான் துண்டு மிஸ் ஆகும்! தோல்விக்கு பிறகு குஜராத்தை வீழ்த்தி புனே வெற்றி
டாப் அணிகளாக இருந்து வரும் குஜராத் ஜெயிண்ட்ஸ், புனேரி பல்தான் அணிகளுக்கு இடையிலான மோதலில் புனே அணி சிறப்பாக விளையாடி வெற்றி பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளது.
ப்ரோ கபடி லீக் 2024 தொடர் ஹைதராபாத்திலுள்ள கச்சபவுலி இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொடரின் 83வது போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் - புனேரி பல்தான் அணிகள் மோதின. இந்த சீசனில் உச்சகட்ட பார்மில் இருந்து வரும் அணியாக புனேரி பல்தான் இருந்து வருகிறது.
இன்றைய ஆட்டத்தின் இரண்டு பாதிகளிலும் புனேரி பல்தான் அணி முன்னிலை வகித்தது. குஜராத் ஜெயிண்ட்ஸ், புனேரி அணி வீரர்களின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவித்தது. முழு ஆட்ட நேர முடிவில் 34-24 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை, புனேரி பல்தான் வீழ்த்தியது.
முதல் பாதி ரெயிட், டேக்களில் முன்னிலை பெற்ற புனேரி பல்தான், இரண்டாம் பாதியில் டேக்கிள் முன்னிலை ரெயிடில் பின் தங்கி டேக்கிளில் முன்னிலை அடைந்தது புனேரி பல்தான்.
இந்த போட்டியில் புனேரி பல்தான் அணி 18 ரெயிட், 13 டேக்கிள், 2 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை பொறுத்தவரை 15 ரெயிட், 9 டேக்கிள் புள்ளிகள் மட்டுமே பெற்றன. ஆல் அவுட், எக்ஸ்ட்ரா, சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
புனேரி பல்தான் கேப்டனும் ஆல்ரவுண்டருமான அஸ்லாம் முஸ்தபா 3 ரெயிட், ஒரு டேக்கிள், ஒரு போனஸ் என 5 புள்ளிகளை பெற்றார். குஜராத் ஜெயிண்ட்ஸ் வீரர் பார்திக் தகியா 3 டேக்கிள், 2 டேக்கிள் என 5 புள்ளிகளை பெற்றார். இவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் டாப் வீரராக உள்ளார்கள்.
எட்டு தொடர் வெற்றிக்கு பிறகு கடந்த போட்டியில் ஜெய்ப்பூருக்கு எதிராக தோல்வியை தழுவிய புனேரி பல்தான், புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தை இழந்தது. இதையடுத்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பிய போதிலும் முதல் இடத்தில் இருக்கும் ஜெய்ப்பூரை விட ஒரு புள்ளி குறைவாக இருப்பதால் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி 8 வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்