PKL 2024: உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் குஜராத்துக்கு எதிராக சூப்பர் வெற்றி பெற்ற பாட்னா பைரேட்ஸ்-pkl 2024 patna pirates beat gujarat giants after loss in first meet with them - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2024: உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் குஜராத்துக்கு எதிராக சூப்பர் வெற்றி பெற்ற பாட்னா பைரேட்ஸ்

PKL 2024: உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் குஜராத்துக்கு எதிராக சூப்பர் வெற்றி பெற்ற பாட்னா பைரேட்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 30, 2024 08:00 AM IST

உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் குஜராத் ஜெயிண்ட்ஸ் வீரர்களை புரட்டி எடுத்த பாட்னா பைரேட்ஸ் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.

குஜராத் வீரரை எஸ்கேப் ஆக விடாமல் தடுக்கும் பாட்னா பைரேட்ஸ் வீரர்கள்
குஜராத் வீரரை எஸ்கேப் ஆக விடாமல் தடுக்கும் பாட்னா பைரேட்ஸ் வீரர்கள்

இரு அணிகளுக்கு புள்ளிப்பட்டியலில் டாப் 6 இடத்தில் இருந்து வந்த நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி கூடுதல் புள்ளிகளை பெற்ற தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் என நிலை இருந்தது. பாட்னா அணி தனது கடைசி போட்டியை டிராவில் முடித்திருந்தது. குஜராத் அணி தனது முந்தைய போட்டியில் வெற்றியை பெற்றிருந்தது.

இதையடுத்து இந்த ஆட்டத்தின் முதல் பாதி ரெயிட், டேக்கிள் என குஜராத் ஜெயிண்ட்ஸ் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் அப்படியே இந்த நிலைமை மாறியது. பாட்னா வீரர்கள் தரமான கம்பேக் கொடுத்து புள்ளிகளை அள்ளினர். இரண்டாம் பாதியில் ரெயிட், டேக்கிள் ஆகியவற்றில் பாட்னா முன்னிலை பெற்றது.

போட்டியின் முதல் பாதியை தன் வசம் வைத்திருந்த குஜராத் ஜெயிண்ட்ஸ், அப்படியே இரண்டாம் பாதியை பாட்னாவுக்கு தாரைவார்த்து கொடுத்தது. முழு ஆட்ட நேர முடிவில் 32-20 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பாட்னா வாரியர்ஸ் வீழ்த்தியது. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது மோதலில் பாட்னா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் பாட்னா பைரேட்ஸ் 15 ரெயிட், 15 டேக்கிள், 2 ஆல்அவுட் புள்ளிகளை பெற்றது. எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெறவில்லை. அதேபோல் சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெறவில்லை.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 20 ரெயிட், 8 டேக்கிள் புள்ளிகள் மட்டுமே பெற்றது. ஆல்அவுட் புள்ளிகள், எக்ஸ்ட்ரா புள்ளிகள், சூப்பர் ரெயிட் புள்ளிகளையும் பெறவில்லை. பாட்னா அணி ரெயிட், டேக்கிள் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டது.

பாட்னா பைரேட்ஸ் வீரர் சந்தீப் குமார் 7 ரெயிட் புள்ளிகளுடன் மொத்தம் 7 புள்ளிகளை பெற்றார். டேக்கிள், போன்ஸ் புள்ளிகள் என எதுவும் பெறவில்லை. அதே போல் குஜராத் ஜெயிண்ட்ஸ் வீரர் பிரதீக் தாக்யா 5 ரெயிட், ஒரு போனஸ் என 6 புள்ளிகள் பெற்றார்.

ப்ரோ கபடி லீக் 2024 சிறப்பாக விளையாடி வரும் அணிகளாக பாட்னா பைரேட்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் இருந்து வருகிறது தற்போது 17 போட்டிகளில் 8 வெற்றியை பெற்றிருக்கும் பாட்னா பைரேட்ஸ், 50 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 16 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்று, 49 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தங்களுக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பை பிரகாசமாகவே வைத்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.