PKL 2024: முடிவை மாற்றிய 5 புள்ளிகள்! ஹரியானாவுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் இரண்டாவது தோல்வி-pkl 2024 haryana steelers beat tamil thalaivas second time on this season - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2024: முடிவை மாற்றிய 5 புள்ளிகள்! ஹரியானாவுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் இரண்டாவது தோல்வி

PKL 2024: முடிவை மாற்றிய 5 புள்ளிகள்! ஹரியானாவுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் இரண்டாவது தோல்வி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 15, 2024 02:26 PM IST

இந்த சீசனில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் தோல்வியை சந்தித்துள்ளது.

ஹரியானா வீரரை மடக்கி பிடிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்
ஹரியானா வீரரை மடக்கி பிடிக்கும் தமிழ் தலைவாஸ் வீரர்கள்

இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வந்த நிலையில், ஆட்டத்தின் முதல் பாதியில் ஹரியானா அணியும், இரண்டாம் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியும் ஆதிக்கம் செலுத்தின. இருந்தபோதிலும் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் தோல்வியை தழுவியது. முழு ஆட்ட நேர முடிவில் 36-31 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியான ஸ்டீலர்ஸ் வெற்றி பெற்றது.

முதல் பாதியில் ரெயிட், டேக்கிள் என இரண்டிலும் தமிழ் தலைவாஸ் பின் தங்கியது. இரண்டாம் பாதியில் விட்டதை பிடிக்கும் விதமாக ரெயிட், டேக்கிள் ஆகிய இரண்டிலும் தமிழ் தலைவாஸ் வீரர்கள் உஷாராக செயல்பட்டு புள்ளிகளை பெற்றபோதிலும், முதல் பாதி சொதப்பலால் ஆட்டம் கைவிட்டு சென்றது.

தொடர்ச்சியாக 7 தோல்விகளுக்கு பிறகு யுபி யோதாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியிருந்தது தமிழ் தலைவாஸ். இதையடுத்து தற்போது மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 19 ரெயிட், 13 டேக்கிள், 2 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளியும் பெற்றது.

அதே போல் தமிழ் தலைவாஸ் அணி 17 ரெயிட், 12 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல்அவுட் புள்ளிகளை பெற்றது. எக்ஸ்ட்ரா புள்ளிகள், சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.

ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர் சந்திரன் ரஞ்சித் 6 ரெயிட், ஒரு போனஸ் என 7 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார்.

தமிழ் தலைவாஸ் அணி மொத்தம் 12 போட்டிகளில் 3 வெற்றி, 9 தோல்களை சந்தித்து 20 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. ஹரியானா ஸ்டீலர்ஸ் 12 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று 39 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

அத்துடன் இந்த சீசனில் ஹரியானாவுக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் தோல்வியை சந்தித்தள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.