Tamil News  /  Sports  /  Pkl 2024: Gujarat Titans Beat Telugu Titans And Moves To Second Spot

PKL 2024: முதல் பாதியில் அதிரடி, இரண்டாம் பாதியில் பலத்த அடி! குஜராத் ஜெயிண்ட்ஸிடம் பணிந்த தெலுங்கு டைட்டன்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 06, 2024 10:45 PM IST

முதல் பாதியில் முன்னிலை பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் இரண்டாவது பாதியில் அதை தொடர தவறியது. இதை சாதமாக்கி கொண்ட குஜராத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.

குஜராத் வீரர்களிடம் இருந்த தப்பிக்க முயற்சிக்கும் தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்
குஜராத் வீரர்களிடம் இருந்த தப்பிக்க முயற்சிக்கும் தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் கை ஓங்கி இருந்தது. பின்னர் இரண்டாம் பாதியில் அதை தொடர தவறியது. இதை சாதமாக்கி கொண்ட குஜராத் ஜெயிண்ட்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை வென்றது. முழு ஆட்டநேர முடிவில், 37-30 புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத்

இந்த போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் 16 ரெயிட், 14 டேக்கிள், 4 ஆல்அவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி 17 ரெயிட், 12 டேக்கிள், ஒரு எக்ஸ்ட்ரா, ஒரு சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட் புள்ளிகளை பெறவில்லை.

குஜராத் ஜெயிண்ட் அணி ரெய்டர் 9 ரெயிட், ஒரு போனஸ் என 10 புள்ளிகளை பெற்று சிறந்த வீரராக உள்ளார்.

புள்ளிப்பட்டியலில் டாப் 5 இடங்களில் இருந்து வந்த குஜராத் அணிக்கு இன்றைய போட்டியின் வெற்றி 7வது வெற்றியாக அமைந்துள்ளது. அத்துடன் இரண்டாவது இடத்துக்கும் முன்னேறியுள்ளது. தெலுங்கு டைட்டனிஸ் விளையாடிய 10 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்