PKL 2024: தொடர்ச்சியாக புனேரி பல்தானுக்கு 8வது வெற்றி! 20 புள்ளிகளில் தோல்வியுற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ்-pkl 2024 gujarat giants loss against puneri paltan by 20 points difference - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2024: தொடர்ச்சியாக புனேரி பல்தானுக்கு 8வது வெற்றி! 20 புள்ளிகளில் தோல்வியுற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ்

PKL 2024: தொடர்ச்சியாக புனேரி பல்தானுக்கு 8வது வெற்றி! 20 புள்ளிகளில் தோல்வியுற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 13, 2024 11:05 PM IST

ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய புனேரி பல்தான், மற்றொரு டாப் அணியான குஜராத் ஜெயிண்டஸை எந்த இடத்திலும் மீள்வதற்கான வாய்ப்பு வழங்காமல் முழுமையாக ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தியது.

புனேரி பல்தான் வீரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும் குஜராத்  ஜெயிண்ட்ஸ் வீரர்
புனேரி பல்தான் வீரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும் குஜராத் ஜெயிண்ட்ஸ் வீரர்

புள்ளிப்பட்டியலில் முதலில் இருந்து வரும் புனேரி பல்தான் உச்சகட்ட பார்மில் உள்ளது. குஜராத் அணியும் தொடர் வெற்றியுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதையடுத்து இந்த போட்டி பரபரப்பாக நடைபெற்ற நிலையில், புனேரி பல்தான் அணி ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் எந்த இடத்திலும் குஜராத் அணி மீள்வதற்கான வாய்ப்பை தராமல் முழு கட்டுப்பாட்டை வைத்திருந்தது புனேரி பல்தான். முழு ஆட்ட நேர முடிவில் 37-17 என்ற புள்ளி கணக்கில் புனேரி பல்தான் வெற்றி பெற்றது. 20 புள்ளிகள் வித்தியாசத்தில் இந்த சீசனில் மோசமான தோல்வியை தழுவியது குஜராத் டைட்டன்ஸ்

இந்த போட்டியில் புனேரி பல்தான் அணி 15 ரெயிட், 17 டேக்கிள், 4ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 7 ரெயிட், 9 டேக்கிள் புள்ளிகள், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல் அவுட், சூப்பர் ரெயிட் புள்ளிகள் பெற்வில்லை.

புனேரி பல்தான் கேப்டன் அஸ்லாம் முஸ்தபா 8 ரெயிட், ஒரு போனஸ் என 10 புள்ளிகளை பெற்றது டாப் வீரராக உள்ளார்.

11 போட்டிகளில் 9 வெற்றி, ஒரு தோல்வி என வெற்றிகரமான அணியாக புனேரி பல்தான் உள்ளது. அத்துடன் குஜராத் ஜெயிண்ட்ஸ் சீசனின் மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.