PKL 2024: தபாங் டெல்லியை 5 புள்ளிகளில் வீழ்த்திய குஜராத்
டாப் அணியான தபாங் டெல்லியை வீழ்த்தி அந்த அணியை விட அதிக வெற்றிகளை பெற்றிருந்தாலும் புள்ளிக்கணக்கில் டெல்லிக்கு அடுத்த இடத்திலேயே உள்ளது குஜராத் ஜெயிண்ட்ஸ்.
ப்ரோ கபடி லீக் 2024 தொடர் ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மாண்சிங் இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொடரின் 76வது போட்டியில் தபாங் டெல்லி - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இரண்டு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முறையே 3, 4 ஆகிய இடங்களில் உள்ளன.
இந்த போட்டியில் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் குஜராத் ஜெயிண்ட்ஸ், இரண்டாம் பாதியில் தபாங் டெல்லி அணி முன்னிலை வகித்தன. டேக்கிள் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட குஜராத் 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முழு ஆட்ட நேர முடிவில் 31-26 என்ற புள்ளிக்கணக்கில் தபாங் டெல்லி தோல்வியை தழுவியது.
முதல் பாதியில் ரெயிட், டேக்கிள் என இரண்டிலும் தபாங் டெல்லி பின் தங்கியது. இரண்டாம் பாதியில் ரெயிட் முன்னிலை பெற்றாலும் டேக்கிளில் பெறவில்லை. குஜராத் அணி முதல் பாதியில் ரெயிட், டேக்கிளில் முன்னிலை பெற்று இரண்டாவது பாதியில் ரெயிட் புள்ளிகளில் கோட்டை விட்டு, டேக்கிளில் கலக்கியது.
இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 17 ரெயிட், 9 டேக்கிள் புள்ளிகளை மட்டுமே பெற்றது. ஆல்அவுட், எக்ஸ்ட்ரா சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
அதே போல் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 15 ரெயிட், 12 டேக்கிள் புள்ளிகளை மட்டும் பெற்றது. தபாங் டெல்லியை போல் ஆல்அவுட், எக்ஸ்ட்ரா, சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.
தபாங் டெல்லி கேப்டனும், ரெய்டருமான ஆஷு மாலிக் 12 ரெயிட், ஒரு போனஸ் என 13 புள்ளிகளை பெற்று டாப் இடத்தில் உள்ளார்.
தபாங் டெல்லியை காட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸ் ஒரு வெற்றி அதிகமாக பெற்றிருக்கிறது. இருந்தபோதிலும். அதுமட்டுமில்லாமல் இரு அணிகளும் 44 புள்ளிகளையும் பெற்று சம நிலையில் உள்ளது.
குஜராத்தை விட குறைவான தோல்விகளை பெற்றிருப்பதால் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலும், குஜராத் ஜெயிண்ட்ஸ் 4வது இடத்திலும் உள்ளது.
தபாங் டெல்லி 13 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வி, 2 டை செய்துள்ளது. குஜராத் ஜெயிண்ட்ஸ் 13 போட்டிகளில் 8 வெற்றி, 5 தோல்வியை சந்தித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்