PKL 2024: கட்டுக்கோப்பாக விளையாடிய தபாங் டெல்லி! 6 புள்ளிகளில் வெற்றியை கோட்டை விட்ட யு மும்பா
ஆட்டத்தின் முதல் பாதி சமநிலை அடைந்தாலும், இரண்டாம் பாதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது தபாங் டெல்லி அணி. யு மும்பா போராட்டத்தை வெளிப்படுத்தினாலும் 6 புள்ளிகளில் தோல்வியை தழுவியது
ப்ரோ கபடி லீக் 2024 தொடர் ஹைதராபாத்திலுள்ள கச்சபவுலி இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொடரின் 80வது போட்டியில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோதின. குஜராத்துக்கு எதிரான முந்தைய போட்டியில் தோல்வி தழுவிய தபாங் டெல்லி இன்றைய ஆட்டத்தில் கம்பேக் தரும் விதமாக விளையாடியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சமமான புள்ளிகளை பெற்றிருந்தபோதிலும், இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணி முன்னேறியது. இதன் விளைவாக முழு ஆட்ட நேர முடிவில் 39-33 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது தபாங் டெல்லி.
முதல் பாதி, இரண்டாம் பாதி என இரண்டிலும் ரெயிட், டேக்கிள் புள்ளிகளில் தபாங் டெல்லி முன்னிலை பெற்றது. இதற்கு நேர் மாறாக யு மும்பா அணி முதல் பாதி, இரண்டாம் பாதி என ரெயிட், டேக்கிள் ஆகியவற்றில் முன்னிலை பெறவில்லை.
இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 22 ரெயிட், 13 டேக்கிள், 2 எக்ஸ்ட்ரா, 2 ஆல்அவுட் புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
அதே போல் யு மும்பா அணி 20 ரெயிட், 10 டேக்கிள், 2 ஆல் அவுட் புள்ளிகளை பெற்றது. ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளியையும் பெற்றது.
தபாங் டெல்லி கேப்டனும், ரெய்டருமான ஆஷு மாலிக் 13 ரெயிட், 4 போனஸ் என 17 புள்ளிகளை பெற்று டாப் இடத்தில் உள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி 8 வெற்றிகள், 49 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. யு மும்பா கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. தற்போது 6 வெற்றிகளுடன், புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்