தமிழ் செய்திகள்  /  Sports  /  Pkl 2024: Dabang Delhi Beat Haryana Steelers By Three Points

PKL 2024: பழிதீர்த்த தபாங் டெல்லி! 3 புள்ளிகளில் ஹரியானாவை வீழ்த்தி த்ரில் வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 24, 2024 10:30 PM IST

ஹரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி என இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் 3 புள்ளியில் வெற்றியை தக்கவைத்தது தபாங் டெல்லி.

ஹரியானா வீரரை தப்பிக்க விடாமல் தடுக்கும் தபாங் டெல்லி வீரர்கள்
ஹரியானா வீரரை தப்பிக்க விடாமல் தடுக்கும் தபாங் டெல்லி வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்றைய ஆட்டத்தில் முதல் பாதியில் டெல்லியும், இரண்டாம் பாதியில் ஹரியானா அணியும் ஆதிக்கம் செலுத்தின. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தின. இதையடுத்து முழு ஆட்ட நேர முடிவில் 35-32 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை, தபாங் டெல்லி வீழ்த்தியது.

முதல் பாதி ரெயிடில் ஹரியானவும், டேக்களில் டெல்லி அணியும் முன்னிலை பெற்றன. இரண்டாம் பாதியில் இந்த முன்னிலை அப்படியே மாறியது. இரண்டாம் பாதியில் ரெயிடில் டெல்லி அணியும், டேக்கிளில் ஹிரியானா அணியும் முன்னிலை பெற்றன.

இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 18 ரெயிட், 12 டேக்கிள், 2 ஆல்அவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 18 ரெயிட், 11 டேக்கிள், 2 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

தபாங் டெல்லி ரெயிடரான ஆஷு மாலிக்,12 ரெயிட், 2 போன்ஸ் புள்ளிகள் என மொத்தம் 14 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார்.

ஹரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி ஆகிய இரு அணிகளும் டாப் 6 இடத்தில் இருந்து வருகின்றன. இதையடுத்து இன்றைய போட்டியில் 9வது வெற்றியை பதிவு செய்த தபாங் டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அடுத்த இடத்தில் 8 வெற்றிகளுடன் உள்ளது.

முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் மோதலில் ஹரியானா 2 புள்ளிகளில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது டெல்லி அணி வெற்றி பெற்று பழி தீர்த்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்