PKL 2024: பெங்களுரு ப்ளேஆஃப் கனவுக்கு செக்! உச்சகட்ட பார்மை தொடரும் புனேரி பல்தால், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்
ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றபோதிலும் பார்மை தக்க வைத்துக்கொள்ளும் விதமாக ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், புனேரி பல்தான் அணிகளும் ஆட்டத்தை வெளிப்படுத்தின.

ப்ரோ கபடி லீக் 2024 தொடர் தற்போது டெல்லியுள்ள தியாகராஜ் இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 109வது போட்டியில் பெங்களுரு புல்ஸ் - புனேரி பல்தான் அணிகள் மோதின.
புனேரி பல்தான் ஏற்கனவே ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், டென்ஷன் இல்லாமல் இந்த ஆட்டத்தில் களமிறங்கியது. பெங்களருவை பொறுத்தவரை கட்டாய வெற்றியாக இந்த போட்டி அமைந்திருந்தது. தற்போது 7வது இடத்தில் இருக்கும் இந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளேஆஃப் வாய்ப்பை பெற முடியும். ஆனால் இந்த போட்டியில் முதல் பாதி, இரண்டாவது பாதி என முழுவதுமாக புனேரி அணி ஆதிக்கம் செலுத்தியது.
புனேரி பல்தான் வெற்றி
இந்த ஆட்டத்தில் முதல் பாதி ரெயிடிலும், இரண்டாவது பாதி டேக்கிளிலும் புனேரி அணியும், முதல் பாதி டேக்கிளிலும், இரண்டாவது பாதி ரெயிடிலும் பெங்களுரு அணி முன்னிலை பெற்றது. முழு ஆட்ட நேர முடிவில் 40-31 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பல்தான் அணி பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்தியது.