தமிழ் செய்திகள்  /  Sports  /  Pkl 2024: Bengal Warriors Beat Telugu Titans By 20 Points

PKL 2024: 20 புள்ளிகளில் தரமான வெற்றி! தெலுங்கு டைட்டனஸை புரட்டி எடுத்த பெங்கால் வாரியர்ஸ் வீரர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 09, 2024 11:10 PM IST

தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எந்த சூழலில் முன்னேற முடியாத அளவில் ஆதிக்கம் செலுத்தியது பெங்கால் வாரியர்ஸ். இதனால் 20 புள்ளிகள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது.

பெங்கால் வாரியர்ஸ் வீரரை மடக்கி பிடிக்க முயற்சிக்கும் தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்
பெங்கால் வாரியர்ஸ் வீரரை மடக்கி பிடிக்க முயற்சிக்கும் தெலுங்கு டைட்டன்ஸ் வீரர்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆட்டத்தின் முதல் பாதி, இரண்டாவது பாதி என முழுக்க பெங்கால் வாரியர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. எந்த சூழ்நிலையிலும் தெலுங்கு வாரியர்ஸ் அணியை முன்னேற விடாமல் பார்த்துகொண்டது. முழு ஆட்டநேர முடிவில், 46- 26 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மிக பெரிய வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 20 ரெயிட், 19 டேக்கிள், 6 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.

தெலுங்கு டைட்டன்ஸ் அணி 14 ரெயிட், 9 டேக்கிள், 2 ஆல் அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெவில்லை.

தோல்வி அடைந்தாலும் தெலுங்கு டைட்ன்ஸ் வீரர் பவன் ஷெராவத் 7 பெயிட், 4 போனஸ் என 11 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார்.

பெங்கால் வாரியர்ஸ் அணிக்கும் இது நான்காவது வெற்றியாக அமைந்துள்ளது. தற்போது அந்த அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. தெலுங்கு வாரியர்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்