PKL 2024: டெல்லியை பழிதீர்த்த பெங்கால் வாரியர்ஸ்..! குஜராத்துக்கு எதிராக ஹரியானா ஆதிக்கம் - நடந்தது என்ன?-pkl 2024 bengal warriors beat dabang delhi and gujarat giants loss against haryana steelers - HT Tamil ,விளையாட்டு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2024: டெல்லியை பழிதீர்த்த பெங்கால் வாரியர்ஸ்..! குஜராத்துக்கு எதிராக ஹரியானா ஆதிக்கம் - நடந்தது என்ன?

PKL 2024: டெல்லியை பழிதீர்த்த பெங்கால் வாரியர்ஸ்..! குஜராத்துக்கு எதிராக ஹரியானா ஆதிக்கம் - நடந்தது என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 03, 2024 01:05 PM IST

குஜராத்துக்கு எதிராக இந்த சீசனில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது ஹரியானா ஸ்டீலர்ஸ்.

தபாங்  டெல்லி வீரரை  மடக்கி பிடிக்கு பெங்கால் வாரியர்ஸ் வீரர் (இடது), ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் (வலது)
தபாங் டெல்லி வீரரை மடக்கி பிடிக்கு பெங்கால் வாரியர்ஸ் வீரர் (இடது), ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் (வலது)

இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வரும் டெல்லி டாப் 6 இடத்தில் உள்ளது. மூன்று தொடர் தோல்விகளுக்கு பிறகு கட்டாய வெற்றியை எதிர்நோக்கி பெங்கால் வாரியர்ஸ் களமிறங்கியது. இதையடுத்து இந்த போட்டியில் முதல் பாதியில் டெல்லியும், இரண்டாவது பாதியில் பெங்கால் அணியும் ஆதிக்கம் செலுத்தன.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் டேக்கிளில் மற்றும் முன்னிலை பெற்றது. மற்றபடி முதல் பாதி ரெயிட், இரண்டாம் பாதி ரெயிட், டேகிள் ஆட்டத்தை பெங்கால் வாரியர்ஸ் தன் வசம் ஆக்கி கொண்டது. முழு ஆட்ட நேர முடிவில் 45-38 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்

இதையடுத்து போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 27 ரெயிட், 9 டேக்கிள், 6 ஆல்அவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை. தபாங் டெல்லி அணி 24 ரெயிட், 8 டேக்கிள், 6 ஆல்அவுட். எக்ஸ்ட்ரா புள்ளிகளையும் சூப்பர் ரெயிட் புள்ளியும் பெறவில்லை.

தபாங் டெல்லி தோல்வி அடைந்தாலும் அந்த அணியின் வீரரான ஆஷு மாலிக் 14 ரெயிட், 3 போனஸ் என 17 புள்ளிகளை பெற்றார். பெங்கால் வாரியர்ஸ் அணியை பொறுத்தவரை நிதிஷ் குமார் 11 ரெயிட், 2 போனஸ் என 13 புள்ளிகளை பெற்றார்.

இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலில் தபாங் டெல்லி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது மோதலில் பெங்கால் வாரியர்ஸ் வென்று பழி தீர்த்து கொண்டது. அத்துடன் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் தோல்வியை தழும் ஏமாற்றம் அளித்தது.

குஜராத் ஜெயிண்ட்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் போட்டி

தபாங் டெல்லி - பெங்கால் வாரியர்ஸ் போட்டிக்கு பின் தொடரின் 101வது ஆட்டமாக குஜராத் ஜெயிண்ட்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முந்தைய போட்டியை போலவே முதல் பாதியில் குஜராத், இரண்டாம் பாதியில் ஹரியானா ஆதிக்கம் செலுத்தின.

முதல் பாதி ரெயிடில் இரு அணிகளும் சம புள்ளிகளை பெற்றன. டேக்கிளில் குஜராத் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் இது அப்படியே மாறி ரெயிட், டேக்கிள் என இரண்டிலும் ஹரியானா அதிக புள்ளிகளை பெற்று முன்னேறியது. முழு ஆட்ட நேர முடிவில் 34-30 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயிண்ட் அணியை ஹரியானா ஸ்டீலர்ஸ் வீழ்த்தியது.

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 15 ரெயிட், 14 டேக்கிள், 4 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 9 ரெயிட், 18 டேக்கிள், 1 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர் வினய் 7 ரெயிட், 2 போனஸ் என 9 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளார். குஜராத் வீரர் பிரதீப் தஹியா 4 ரெயிட், ஒரு டேக்கிள், 2 போனஸ் என 7 புள்ளிகளை பெற்று அந்த அணியின் டாப் வீரராக உள்ளார்.

இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த முதல் போட்டியில் ஹரியானா தான் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது மோதலிலும் குஜராத்தை வீழ்த்தியுள்ளது.

புள்ளிப்பட்டியலில் யார் டாப்?

டெல்லியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளாக இருந்து வரும் தபாங் டெல்லி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே 3, 4 ஆகிய இடங்களில் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.