Tamil News  /  Sports  /  Pkl 2023: U Mumba Beat Bengaluru Bulls By 5 Points

PKL 2023: உள்ளுர் ரசிகர்கள் முன்னிலையில் சூப்பர் வெற்றி! பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்திய யு மும்பா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 05, 2024 11:15 PM IST

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் முன்னிலை பெற்றபோதிலும், 5 புள்ளிகள் வித்தியாசத்தில் யு மும்பா அணியிடம் சரணடைந்தது பெங்களுரு புல்ஸ். உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் முதல் போட்டியிலேயே யு மும்பா வெற்றி பெற்றுள்ளது.

பெங்களுரு புல்ஸ் வீரரை தப்பிக்க விடாமல் மடக்கி பிடிக்கும் யு மும்பா வீரர்கள்
பெங்களுரு புல்ஸ் வீரரை தப்பிக்க விடாமல் மடக்கி பிடிக்கும் யு மும்பா வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

தொடர் வெற்றிகளை பெற்று வரும் யு மும்பா அணி இன்றைய போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் விதமாகவே விளையாடியது. முதல் பாதியில் சொதப்பிய பெங்களரு புல்ஸ், இரண்டாவது பாதியில் கம்பேக் கொடுத்து திருப்புமுனை தந்தது. இருப்பினும் மிகவும் கவனமுடன் செயல்பட்ட யு மும்பா 5 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்தியது. முழு ஆட்ட நேர முடிவில் 40-35 என்ற புள்ளிக்கணக்கில் உள்ளுர் ரசிகர்கள் முன்னிலையில் சூப்பரான வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் யு மும்பா 21 ரெயிட், 15 டேக்கிள், 4 ஆல்அவுட் புள்ளிகளை பெற்றது. எக்ஸ்டார, சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெறவில்லை.

பெங்களுரு புல்ஸ் அணி 24 ரெயிட், 8 டேக்கிள், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட் புள்ளிகள், சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

யு மும்பா வீரர் அமிர் முகமது ஜாஃபர்தனேஷ் 5 ரெயிட், ஒரு டேக்கிள், ஒரு போனஸ் என 7 புள்ளிகளை பெற்று டாப் வீரராக உள்ளது.

கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருக்கும் யு மும்பா மொத்தமாக 31 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்