PKL 2023: ஐந்து தொடர் தோல்விக்கு பிறகு சீசனின் முதல் வெற்றியை பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ்!
ஐந்து தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றுள்ளது தெலுங்கு டைட்டன்ஸ் அணி. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
புரோ கபடி லீக் 2023 தொடர் அகமதாபாத், பெங்களுரு, புனே நகரங்களை தொடர்ந்து தற்போது நான்காவது கட்டமாக சென்னையில் நடைபெறுகிறது. இந்த தொடரின் 35வது போட்டியும், இன்றைய நாளின் இரண்டாவது போட்டியும் சென்னை ஜவஹர்லால் நேரு மைதனத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்த சீசனில் இதுவரை வெற்றி பெறாத அணியாக இருந்து வந்த தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா அணிக்கு எதிராக ஒரு புள்ளி வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்ற நிலையில், முழு ஆட்ட நேர முடிவில் 37-36 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
தெலுங்கு டைட்டன்ஸ் அணி 15 ரெயிட், 18 டேக்கிள், 2 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை. தெலுங்கு டைட்ன்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு அவர்களின் டேக்கிள் ஆட்டம் கைகொடுத்தது.
ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 21 ரெயிட், டேக்கிள் 9, 2 ஆல்அவுட், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. அதே போல் ஒரு சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
தோல்வியடைந்த போதிலும் ஹரியானா வீரர் ஷிவம் படாரே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 8 ரெயிட், 4 போனஸ் புள்ளிகளை பெற்றார்.
தெலுங்கு டைட்டன்ஸ் வீரர் பவன் ஷெராவத் அந்த அணியில் அதிகபட்சமாக 10 புள்ளிகள் பெற்றார். இந்த சீசனில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்த தெலுங்கு டைட்டன்ஸ் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்