Tamil News  /  Sports  /  Pkl 2023: Puneri Paltan Eight Victory By Defeating Up Yoddhas

PKL 2023: கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் யுபி யோதாஸ் தோல்வி! புனேரி பல்தான் அணிக்கு 8வது வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 03, 2024 11:30 PM IST

முதல் இடத்தில் இருந்து வரும் புனேரி பல்தான் யுபி யோதாஸ் அணியை வீழ்த்தி 8வது வெற்றியை பதிவு செய்துள்ளது. கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் யுபி யோதாஸ் தோல்வியை தழுவியுள்ளது.

யுபி வீரரை தப்பிக்க விடாமல் தடுக்கும் புனேரி பல்தான் வீரர்கள்
யுபி வீரரை தப்பிக்க விடாமல் தடுக்கும் புனேரி பல்தான் வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த சீசனில் சிறந்த அணியாக விளங்கிய யுபி யோதாஸ் இந்த முறை மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதையடுத்து இன்றைய போட்டியில் சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் புனே பல்தான் முழு ஆட்ட நேர முடிவில் 40-31 என்ற புள்ளி கணக்கில் யுபி யோதாஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் புனேரி பல்தான் 21 ரெயிட், 13 டேக்கிள், 2 ஆல்அவுட் புள்ளிகளை பெற்றது. எக்ஸ்ட்ரா, புள்ளிகள் பெறவில்லை. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளியை பெற்றது.

அதேபோல் யுபி யோதாஸ் அணி 13 ரெயிட், 14 டேக்கிள், 2 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

புனரி பல்தான் கேப்டனும், ஆல்ரவுண்டர் வீரருமான அஸ்லாம் முஸ்தபா 8 ரெயிட், 3 டேக்கிள் என 14 புள்ளிகளை பெற்ற டாப் வீரராக உள்ளார். இவர் போனஸ் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

விளையாடிய 9 போட்டிகளில் 8 வெற்றி, ஒரு தோல்வி என பெற்றிருக்கும் புனேரி பல்தான் 41 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. யுபி யோதாஸ் 11 போட்டிகளில் 3 வெற்றியை மட்டும் பெற்று 10வது இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்