தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2023: ஹரியானாவை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்! புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றம்

PKL 2023: ஹரியானாவை வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்! புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேற்றம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 03, 2024 11:00 PM IST

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிராக முழு ஆதிக்கம் செலுத்திய ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் தொடரின் ஐந்தாவது வெற்றியை பெற்றுள்ளது.

ஹரியானா வீரரை மடக்கி பிடிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர்கள்
ஹரியானா வீரரை மடக்கி பிடிக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இன்றைய போட்டியில் ஜெய்ப்பூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் முழு ஆட்ட நேர முடிவில் 45-34 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் 23 ரெயிட், 8 டேக்கிள், 2 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 18 ரெயிட், 13 டேக்கிள், 2 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

ஜெயிப்பூர் பிங்க் பேந்தர்ஸ் வீரர் அர்ஜுன் தேஸ்வால், 10 ரெயிட், 4 போனஸ் என 14 புள்ளிகளை பெற்ற டாப் வீரராக உள்ளார்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் சீசனின் 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில் 33 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்