தமிழ் செய்திகள்  /  Sports  /  Pkl 2023: Dabang Delhi Beat Patna Pirates By One Point And Moves To Second Spot

PKL 2023: ஒரே புள்ளியில் த்ரில் வெற்றி! பாட்னாவை வீழ்த்தி விர்ரென இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய தபாங் டெல்லி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 05, 2024 09:34 PM IST

முதல் பாதியில் சொதப்பிய பாட்னா பைரேட்ஸ் இரண்டாவது பாதியில் புள்ளிகளை குவித்தபோதிலும் கடைசி நேரத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தபாங் டெல்லியிடம் வீழ்ந்தது.

பாட்னா பைரேட்ஸ் வீரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும் தபாங் டெல்லி வீரர்
பாட்னா பைரேட்ஸ் வீரர்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கும் தபாங் டெல்லி வீரர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து நல்ல பார்மில் இருந்து வரும் தபாங் டெல்லி இன்றைய போட்டியிலும் அதை தொடரந்தது. முதல் பாதியில் பெரிதாக புள்ளிகளை பெறாத பாட்னா பைரேட்ஸ் இரண்டாவது பாதியில் விஸ்வரூபம் எடுத்து அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றது முழு ஆட்டநேர முடிவில் 38-37 புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை, தபாங் டெஸல்லி வீழ்த்தியது. ஒரு புள்ளி வித்தியாசத்தில் தபாங் டெல்லி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தபாங் டெல்லி 21 ரெயிட், 11 டேக்கிள், 4 ஆல்அவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஒரு சூப்பர் ரெயிட் புள்ளியையும் பெற்றது.

பாட்னா பைரேட்ஸ் அணி 25 ரெயிட், 7 டேக்கிள் புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட், எக்ஸ்ட்ரா புள்ளிகள் எதுவும் பெறவில்லை. ஒரு சூப்பர் ரெயிட் புள்ளியையும் பெற்றுள்ளது.

பாட்னா பைரேட்ஸ் வீரரும் ரெய்டருமான சச்சின், தபாங் டெல்லி கேப்டனும், வீரருமான ஆஷு மாலிக் என இருவரும் தலா 10 புள்ளிகளை பெற்றுள்ளனர்.

சச்சின் 10 ரெயிட் புள்ளிகளை பெற்றார். ஆஷு மாலிக்கும் 10 ரெயிட் புள்ளிகளை பெற்றார். இருவரும் போனஸ் புள்ளிகள் பெறவில்லை. இவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் டாப் வீரர்களாக உள்ளார்கள்.

பாட்னா பைரேட்ஸை வீழ்த்தியிருக்கும் தபாங் டெல்லி 6வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்