தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2023: டாப் அணி குஜராத்தை வீழ்த்தி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய தபாங் டெல்லி

PKL 2023: டாப் அணி குஜராத்தை வீழ்த்தி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய தபாங் டெல்லி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 02, 2024 11:00 PM IST

நல்ல பார்மில் இருந்து வரும் தபாங் டெல்லி அணி, டாப் அணியான குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி சீசனின் 5 வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ரெயிட் செய்யும் தபாங் டெல்லி வீரர்
ரெயிட் செய்யும் தபாங் டெல்லி வீரர்

புரோ கபடி லீக் 2023 தொடர் தற்போது நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொடரின் 53வது போட்டி, குஜராத் ஜெயிண்ட்ஸ் - தபாங் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் இரண்டு மற்றும் நான்காவது இடத்தை பிடித்திருக்கும் அணிகளாக குஜராத், டெல்லி இருந்து வரும் நிலையில் யார் பலசாலி என்பதை காட்டும் விதமாக இந்த போட்டி அமைந்தது.

தொடக்கம் முதலே குஜராத்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வந்த டெல்லி அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றது. முழு ஆட்ட நேர முடிவில் 35-28 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் தபாங் டெல்லி அணி 23 ரெயிட், 8 டேக்கிள், 2 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 17 ரெயிட், 6 டேக்கிள், 2 ஆல்அவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

ட்ரெண்டிங் செய்திகள்

டெல்லி அணி கேப்டனும், ரெய்டருமான ஆஷு மாலிக், 10 ரெயிட், ஒரு போனஸ் என 11 புள்ளிகளை பெற்ற டாப் வீரராக உள்ளார்.

இந்த வெற்றியுடன் 9 போட்டிகளில் 5வது வெற்றியை பெற்ற தபாங் டெல்லி, புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9