Pak A vs Ind A: ஏசிசி ஆடவர் எமர்ஜிங் டீம்ஸ் ஆசிய கோப்பை- பாகிஸ்தான் ஏ அணி சாம்பியன்
தய்யப் தாஹிர் சதமும், சஹிஸாடா பர்கான், சைம் அயூப் ஆகியோர் அரை சதமும் விளாசினர்.
ஏசிசி ஆடவர் எமர்ஜிங் டீம்ஸ் ஆசிய கோப்பை போட்டி பைனலில் பாகிஸ்தான் ஏ அணி இந்தியா ஏ அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
பைனல் போட்டி இலங்கையின் கொழும்பில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்து இந்தியா ஏ அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பாகிஸ்தான் ஏ அணி விளையாடியது.
அதிரடி காண்பித்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது.
தய்யப் தாஹிர் சதமும், சஹிஸாடா பர்கான், சைம் அயூப் ஆகியோர் அரை சதமும் விளாசினர்.
353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி விளையாடியது. ஆனால், 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்களில் இந்திய ஏ அணி சுருண்டது.
அதிகபட்சமாக இந்திய ஏ அணி சார்பில் அபிஷேக் சர்மா மட்டும் 61 ரன்கள் விளாசினார். சாய் சுதர்ஷன் 29 ரன்களிலும், கேப்டன் யஷ் துல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தத் தொடரில் இந்தியா ஏ அணி சிறப்பாக செயல்பட்டு ஒரு தோல்வி கூட இல்லாமல் பைனலுக்கு முன்னேறியது. மறுபக்கம் பாகிஸ்தான் அணி, குரூப் பி பிரிவில் நடந்த ஓர் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டது.
அதற்கு பைனலில் பதிலடி கொடுத்துவிட்டது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டித் தொடர், இலங்கையில் நடந்து வந்தது.
குரூப் ஏ பிரிவில் இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, ஓமன் ஏ ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, நேபாளம் ஏ, ஐக்கிய அரபு அமீரகம் ஏ ஆகிய அணிகளும் இருந்தன.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்