HT Sports Special: ஒரே டெஸ்ட்போட்டி மட்டும்தான் - மிகவும் இளம் வயதில் அறிமுகமான வீரரும், அவரது தனித்துவமான சாதனையும்
மிகவும் இளம் வயதில் டெஸ்ட் கிரிக்கெடில் அறிமுகமானவர் என்ற பெருமை பெற்ற வீரர் ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடிவிட்டு, மீண்டும் வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் இளம் வயதில் கிரிக்கெட் விட்டு விலகிய வீரராகவும் உள்ளார்.
கிரிக்கெட் பல்வேறு விதமான விநோத சாதனைகள் காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக மிகவும் இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை பாகிஸ்தானை சேர்ந்த காலித் ஹசான் பெற்றுள்ளார்.
இவர் முதன்முதலாக 1954இல் இங்கிலாந்துக்கு எதிராக ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அப்போது இவருக்கு வயது 16 ஆண்டுகள் 352 ஆண்டுகள் ஆகும். வலது கை லெக் ஸ்பின்னரான இவருக்கு ஒரேயொரு இன்னிங்ஸில்தான் பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. 21 ஓவர்கள் பந்து வீசிய காலித் ஹாசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பேட்டிங் செய்ய இரண்டு இன்னிங்ஸிலும் வாய்ப்பு கிடைத்த நிலையில், 17 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு இவர் பாகிஸ்தான் அணிக்காக விளையாட அழைக்கப்படவே இல்லை. கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் தோன்றியபோது இவரது வயது 16 ஆண்டுகள் 356 நாள்கள் ஆகும்.
அந்த வகையில் பார்த்தால் மொத்த 5 நாள்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் விளையாடிய வீரராக இவர் உள்ளார். அத்துடன், சர்வதேச கிரிக்கெட்டில் ஒற்றை ஆட்டத்தில் தோன்றிய அதிசயமாக இருந்து வரும் காலித் ஹாசன் 17 முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டில் இதுபோன்ற தனித்துவமான சாதனைகளும் நிகழ்வதுடன். அந்த வகையில் One Match Wonder என்று அழைக்கப்பட்ட பாகிஸ்தான் பவுலரான காலித் ஹசான், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்றுதான் அறிமுகமானார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்