HT Sports Special: கவாஸ்கர் Cricket Careerஇல் 48 ஆண்டு கால கரும்புள்ளி! உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நிகழ்ந்த சோகம்
ஏன் அப்படியொரு ஆமைக்கு போட்டியாக மந்தமான இன்னிங்ஸை சுனில் கவாஸ்கர் விளையாடினார் என்பது இன்றளவும் புதிராகவே உள்ளளது. ஆனாலும் இது அவரது கிரிக்கெட் கேரியரில் 48 ஆண்டுகளாக பின்தொடரும் கரும்புள்ளியாகவே இருந்து வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இந்தியா - இங்கிலாந்து இடையே 48 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் தொடங்கியது. வரலாற்று சிறப்பு மிக்க, கிரிக்கெட் விளையாட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்திய ரசிகர்களுக்கு மிகவும் சோகமாக அமைந்த இந்த நாள், தங்களது அணி தோல்வியுற்றதை காட்டிலும் கவாஸ்கர் விளையாடிய மிகவும் மோசமான இன்னிங்ஸ்தான் காரணமாக இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து, டென்னிஸ் அமிஸ் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 60 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது.
இந்த மிகப் பெரிய சேஸை விரட்டிய இந்தியாவுக்கு காத்திருந்ததது அதிர்ச்சி. அணியின் தொடக்க பேட்ஸ்மேனும், அப்போதையை ரன் மெஷினுமாக இருந்த கவாஸ்கர் ரன் எடுப்பதில் தடுமாறினார். அவர் ரன் எடுக்க சிரமபட்டார் என்பதை காட்டிலும் அந்த முயற்சியை பெரியாக மேற்கொள்ளவில்லை என்றே சொல்லும் அளிவில் ஆமைக்கு போட்டியாக மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் சிறிய அளவிலும் நினைத்து கூட பார்க்காமல், தோல்வியை பெற வேண்டும் என்று கங்கணம் கட்டியதுபோல் விளையாடினார். இதன் விளைவாக இந்திய அணி 60 ஓவரில் எடுத்த ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே. 202 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா அணி மிகப் பெரிய தோல்வியை தழுவியது.
கவாஸ்கர் தனது இன்னிங்ஸில் 174 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் எடுத்து நாட்அவுட் பேட்ஸ்மேனாக வெளியேறினார். தனது இன்னிங்ஸில் ஒரேயொரு பவுண்டரி அவர் அடித்தார்.
எதற்காக இப்படியொரு மந்தமான இன்னிங்ஸை அவர் விளையாடினார் என்பதற்கு இன்று வரையிலும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
ஆனால் அந்த போட்டியில் அணியின் கேப்டனாக இருந்தவரும், தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் சர்வதேச அம்பயருமான சீனிவாச வெங்கட்ராகவன் சில ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சம்பவம் பற்றி பேட்டி ஒன்றில், "மிகவும் மோசமான சுவையை வெளிப்படுத்தியது. அவர் அணிக்கு மட்டுமல்ல, இந்திய ரசிகர்கள், ஆட்டத்தின் ஒற்றுமை திறன் என அனைத்துக்கும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார். அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை" என கூறினார்.
கவாஸ்கரின் இந்த விநோத இன்னிங்ஸ் முடிவுக்கு பின்னர் ரசிகர்கள் பலரும் நேரடியாக சென்று அவரிடம் முறையிட முயற்சித்த சம்பவமும் அரங்கேறியது. பலரும் அவரை கேலி செய்தனர். ஒரு கிரிக்கெட் ரசிகராக இந்தியா அணியின் இந்த சரண்டர் ரசிகர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
பிட்ச் பேட் செய்ய கடினமாக இருந்ததாக அப்போது கவாஸ்கர் கூறியதை ஏற்க மறுத்த கிரிக்கெட் வல்லுநர்கள், அதே ஆடுகளத்தில் இங்கிலாந்து சிறப்பாக ஆடியதை சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து இந்த விஷயம் குறித்து “Sunny Days” என்கிற தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பட்டிருந்த கவாஸ்கர், " ஒரு கட்டத்தில் நான் ஸ்டம்பை விட்டு விலகிவிட்டால் போல்டாகி விடலாம் என்றெல்லாம் தோன்றியது. ஏனென்றால் அப்போது நான் அனுபவித்த மன வேதனையிலிருந்து விடுபட இதுவே ஒரே வழியாக இருந்தது. என்னால் வேகமாக ஆடவும் முடியவில்லை, வெளியேறவும் முடியவில்லை. இறுதியில் இயந்திரதன்மையாக விளையாடினேன்" என்று கூறியுள்ளார்.
எது எப்படியாக இருந்தாலும் 36 ரன்கள் 174 பந்துகள் என்றவொரு கவாஸ்கரின் கேரியரில் ஒட்டிக்கொண்ட கரும்புள்ளியாகவே மாறியுள்ளது. இந்திய ரசிகர்களுக்கு உச்சகட்ட வேதனை அளித்த இந்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 48 ஆண்டுகள் ஆகிறது.
டாபிக்ஸ்