Ashwin: 'அஸ்வினை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் விட்டது மிகப் பெரிய தவறு'-இங்கிலாந்து முன்னாள் வீரர் கருத்து
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ashwin: 'அஸ்வினை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் விட்டது மிகப் பெரிய தவறு'-இங்கிலாந்து முன்னாள் வீரர் கருத்து

Ashwin: 'அஸ்வினை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் விட்டது மிகப் பெரிய தவறு'-இங்கிலாந்து முன்னாள் வீரர் கருத்து

Manigandan K T HT Tamil
Jun 08, 2023 12:27 PM IST

Ravichandran Ashwin: ‘நான் கேப்டனாக இருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும்.’

இந்திய கிரிக்கெட் பிளேயர் அஸ்வின்
இந்திய கிரிக்கெட் பிளேயர் அஸ்வின்

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் நமது அணி வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ளனர், ஆனால் என்னைக் கேட்டால், நான் கேப்டனாக இருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். ரோஹித்தும் நானும் வித்தியாசமாக சிந்திக்கிறோம். அஸ்வினின் தரத்திலிருந்து ஒரு சுழற்பந்து வீச்சாளரை லெவனில் இருந்து விலக்கி வைப்பது எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்திருக்கும் என்றார் கங்குலி.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், "இப்போது டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளதால், புதிய பந்தால் கொஞ்சம் விக்கெட் எடுக்கலாம் என நினைக்கிறார்கள். ஏனெனில் இந்த ஆட்டம் தொடரும் போது, அது மாறும் என்று நான் நினைக்கிறேன். அஸ்வின் ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுத்திருப்பார். ஆனால், அவர் இல்லை" என்றார்.

அஸ்வினை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் விட்டது மிகப் பெரிய தவறு என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்தார்.

ஓவல் மைதானத்தில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில், இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் - ட்ரேவிஸ் ஹெட் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்துள்ளனர்.

இன்று நடைபெற்ற மூன்று செஷன்களில் முதலாவது செஷனில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் சம அளவில் ஆதிக்கம் செலுத்தினர்.

இதன் பின்னர் நடைபெற்ற மீதமுள்ள இரண்டு செஷனிலும் ஆஸ்திரேலியா அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ட்ராவிஸ் ஹெட் பேட்டிங் செய்ய தொடங்கியது முதல் அதிரடியாக பேட் செய்து விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

156 பந்துகளை எதிர்கொண்டு 146 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்நகாமல் இருந்தார். இதில் 22 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதேபோல் பொறுமையாக பேட் செய்த ஸ்டீவ் ஸ்மித் 227 பந்துகளை எதிர்கொண்டு 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இவர் தனது இன்னிங்ஸ் 14 பவுண்டரிகளை அடித்தார். இன்னும் சதத்துக்கு அவர் 5 ரன்கள் மீதம் உள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.