Udhayanidhi Stalin: ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுடன் ஆலோசித்தது என்ன?-அமைச்சர் உதயநிதி ட்வீட்
Abhinav Bindra: “விளையாட்டுத்துறை சார்ந்து முன்னெடுக்க வேண்டிய பல்வேறு அம்சங்களை இந்த சந்திப்பின் போது ஆலோசித்தோம்.”சந்
ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்று தனி நபர் பிரிவில் இந்தியா சார்பில் முதல் தங்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்த அபினவ் பிந்த்ராவை தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.26) சந்தித்து பேசினார்.
இத்தகவலை அவரே டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அவருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
“அபிநவ் பிந்த்ராவை இன்று சந்தித்தோம். விளையாட்டுத்துறை சார்ந்து முன்னெடுக்க வேண்டிய பல்வேறு அம்சங்களை இந்த சந்திப்பின் போது ஆலோசித்தோம்.” என்று உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, CITIIS திட்டத்தில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவியருக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் பயிற்சிகளை வழங்கும் நிகழ்ச்சியை கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருடன் சைதை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏப்ரல் 12 அன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அஸ்வின் பந்துவீசினார். அந்த பந்தை உதயநிதி ஸ்டாலின் தூக்கி அடித்தார்.
இதை அங்கிருந்த அனைவரும் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
சிறப்பான நிகழ்ச்சி இது. கால்பந்து, கிரிக்கெட் பயிற்சி வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெருமையளிக்கிறது. மாணவிகள் நிறைய பேர் இருக்கிறீர்கள். மாணவர்களை விட மாணவிகள் விளையாட்டில் நிறைய சாதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல வருடங்களாக முயற்சி செய்து இந்த முயற்சியை அவர் முன்னெடுத்து இருக்கிறார்.
அஸ்வின் சிஎஸ்கேவுக்கு விளையாடவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு விளையாடுகிறார்.
அவர் விக்கெட் எடுத்தால் நாம் கைதட்டுவோம். அவர் தமிழர். அவருடைய திறமையை நாம் பாராட்டுவோம்.
பல்வேறு விளையாட்டு துறை விஷயங்களில் நீங்கள் (அஸ்வின்) எங்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்