Kabadi: கபடி விளையாட்டால் ஈர்க்கப்பட்ட நியூசி., கிரிக்கெட் வீரர்கள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Kabadi: கபடி விளையாட்டால் ஈர்க்கப்பட்ட நியூசி., கிரிக்கெட் வீரர்கள்

Kabadi: கபடி விளையாட்டால் ஈர்க்கப்பட்ட நியூசி., கிரிக்கெட் வீரர்கள்

Manigandan K T HT Tamil
Nov 21, 2023 03:14 PM IST

வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் தனது அணி வீரர்களான டேரில் மிட்செல் மற்றும் டிம் சவுத்தி கபடி விளையாட்டில் முயற்சி செய்ய ஆதரித்தார்,

நியூசிலாந்து வீரர் போல்ட், கபடி வீரர்கள்
நியூசிலாந்து வீரர் போல்ட், கபடி வீரர்கள்

"இது ஒரு அழகான விளையாட்டாகத் தெரிகிறது. இது ரக்பியைப் போலவே தோன்றுகிறது, ஒரு வீரர் எல்லையைத் தாண்டிச் செல்வதைத் தடுக்க எதிரணி வீரர்கள் ஒன்றிணைகிறார்கள். இந்த விளையாட்டுக்காக நான் க்ளென் பிலிப்ஸை பரிந்துரைக்கிறேன். அவர் ஒரு சக்திவாய்ந்த வீரர்" என்று விக்கெட் கீப்பர்-பேட்டர் டாம் லாதம் கூறினார். 

இதற்கிடையில், வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் தனது அணி வீரர்களான டேரில் மிட்செல் மற்றும் டிம் சவுத்தி கபடி விளையாட்டில் முயற்சி செய்ய ஆதரித்தார், 

"நான் கபடி போட்டியை இரண்டு முறை பார்த்திருக்கிறேன். அந்த விளையாட்டிற்கு வலுவான கால்கள் தேவை என்று நினைக்கிறேன். நான் டேரில் மிட்செல் மற்றும் டிம் சவுத்தி ஆகியோரின் பெயர்களை இந்த விளையாட்டுக்கு பரிந்துரைக்கிறேன்" என்றார்.

மேலும், ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் தனது சக வீரர் க்ளென் பிலிப்ஸ் கபடி விளையாடுவதைப் பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். "எனக்கு கபடி விளையாடும் அளவுக்கு பலம் இல்லை. கபடிக்கு நீங்கள் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். லாக்கி பெர்குசன் நன்றாக விளையாடலாம். அவருக்கு வலுவான உடலும் பெரிய கால்களும் உள்ளன." என்றார்.

ப்ரோ கபடி லீக்கின் பத்தாவது சீசன் 2023 டிசம்பர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.