Nellai vs Tiruppur: புவனேஷ்வரனின் மிரட்டல் பவுலிங்கால் சரிந்த நெல்லை - புள்ளி கணக்கை தொடங்கிய திருப்பூர்
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் நெல்லை அணி முதல் தோல்வியையும், திருப்பூர் அணி முதல் வெற்றியையும் பெற்றுள்ளது. திருப்பூர் வேகப்பந்து வீச்சாளர் துல்லியமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை அள்ளியதோடு சிறந்த பவுலிங்கை பதிவு செய்துள்ளார்.
டிஎன்பிஎல் தொடரின் 10வது போட்டி நெல்லை ராயல் கிங்ஸ் - ஐட்ரீம்ஸ் திருப்பூர் தமிழன் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. திண்டுக்கல் என்பிஆர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது.
போட்டி தொடங்குவதற்கு முன்னர் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது நெல்லை அணி. இதையடுத்து நெல்லை அணியை ஆரம்பத்தில் இருந்த ரன் குவிப்பில் ஈடுபடவிடாமல் திருப்பூர் பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வரன் பவர்ப்ளே ஓவர்களில் அற்புதமாக பந்து வீசினார்.
நெல்லை அணியின் டாப் ஆர்டபர் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நெல்லி அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சோனு யாதவ் ஓரளவு நிலைத்து ஆடி 35 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக நெல்லை அணிக்காக முதல் போட்டியில் சதமடித்த குருசாமி அஜிதேஷ் 20 ரன்கள் அடித்தார் மற்றவர்கள் சொதப்பிய நிலையில் 18.2 ஓவர்களில் 124 ரன்களுக்கு நெல்லை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
நெல்லை பேட்ஸ்மேன்கள் அற்புதமான பவுலிங்கால் கதிகலங்க செய்த் திருப்பூர் பவுலர் புவனேஷ்வரன் வெறும் 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து 125 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய திருப்பூர் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ராதாகிருஷ்ணன் - ரஹேஜா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தனர். ரஹேஜா 49, ராதகிருஷ்ணன் 34 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.
குறைவான இலக்கை என்பதால் தொடக்கம் சிறப்பாக அமைம்த நிலையில் ஆட்டத்தை அதே 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து திருப்பூர் அணியினர் பினிஷ் செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் திருப்பூர் அணி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
அதேபோல் நெல்லை அணி விளையாடிய 3 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
அற்புதமான பந்து வீச்சால் நெல்லை அணியை மிரட்டியதுடன், திருப்பூர் அணி முதல் வெற்றியை பெற காரணமாக அமைந்த புவனேஷ்வரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்